என் மலர்
நீங்கள் தேடியது "Prime Minister’s Visit"
- முதல்-அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.
- அடுத்த மாதம் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ராமநாதபுரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 2 நாட்கள் ராமநாத புரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மீன வர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் மண்டபம் கேம்ப் பகுதியில் கலோரியால் பங்களா அருகில் உள்ள இடத்தில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் ராமநாதபுரத்தில் கட்சி நிகழ்ச்சி நடத்துவதற்காக அச்சுந்தன்வயல், பேராவூர் இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.