இலவச கண் சிகிச்சை முகாம்

ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது.
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

ராமநாதபுரம்

ரெகுநாதபுரம் மெயின் சாலையில் உள்ள வல்லபை அய்யப்பன் கோவிலில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வல்லபை அய்யனார் சேவை நிலையம் அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடத்தியது.

முகாமில் ரெகுநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கண் குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் வீரஜா தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி குழுவினர்களால் பரிசோதனை செய்யப் பட்டது.

சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். முன்னதாக வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குரு சுவாமி மோகன் வரவேற்றார். சந்தனகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ரகுநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஜெகத்ரட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com