என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய பஸ்சை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரிசல்குளம் கிராமத்திற்கு புதிய அரசு பஸ் வசதி
- புதிய பஸ்சை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒ.கரிசல்குளம் என்ற கிராமம் கமுதி-சாயல்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மாலை நேரத்தில் பள்ளி மாண வர்கள் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
கிராமத்தின் விலக்கு சாலையில் இறங்கி 5 கிமீ தூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய நகர பஸ் வசதி ஏற்படுத்தி தரப் பட்டது.
தங்களது கிராமத்திற்கு வந்த இந்த புதிய பஸ்சை கிராம பொதுமக்கள் குலவையிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் பஸ்சை தொட்டு வணங்கி கைகளை கூப்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித் தனர்.
முன்னதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான பாண்டி, புதிய பஸ்சை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இதில் கமுதி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் நடத்துனர், தொழிற்சங்க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.






