search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி திருக்கல்யாண திருவிழா: ராமேசுவரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம்
    X

    ஆடி திருக்கல்யாண திருவிழா: ராமேசுவரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம்

    • 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 7-வது நாளான நேற்று இரவு 9 மணிக்கு பர்வத வர்த்தினி அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து வெள்ளித்தேரை ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட வெள்ளி தேரோட்டமானது கோவிலின் 4 ரத வீதிகளை சுற்றி மீண்டும் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தடைந்தது. திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந் தேதி மாலை 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந் தேதி இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    Next Story
    ×