search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "citizen"

    • குடிமகன்கள் தொல்லையால் மாணவிகள்-பெண்கள் முகம் சுழிக்கின்றனர்.
    • மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    அபிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகிலேயே மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என தொடர்ச் சியாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வருகிறது.

    அபிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அகத்தாரிருப்பு, அச்சங்குளம், பள்ளபச்சேரி தீர்தாண்டதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் அபிராமம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் அபிராமம் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையில் குடித்து விட்டு தள்ளாடியபடி சுற்றி திரிகின்றனர். மேலும் அங்குள்ள கடைகளில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது முகம் சுழித்தபடி உள்ளனர்.

    மேலும் அவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்களை தாக்கி தகராறு செய்கின்றனர். மேலும் போதையில் இருக்கும் ஆசாமிகளை கண்டிக்கவும் பலர் தயங்குகின்றனர். பலர் போதை தலைக்கேறி அரை குறை ஆடையுடன் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் முகம் சுழித்தபடி நிற்கின்றனர். இந்த நிலையில் போதையில் பயணி களுக்கும், வியாபாரி களுக்கும் தொல்லை கொடுத்து வரும் போதை ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பஸ் நிறுத்த பகுதியில் போதை ஆசாமிகள் திரியாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. #JammuKashmir #USCitizen
    வாஷிங்டன்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு தலைவர் ஸ்டீவ் ஹெர்மன் கூறியதாவது:-

    பயங்கரவாதமும், பதற்றமும் நிலவுவதால், காஷ்மீருக்கு செல்ல வேண்டாம். பயங்கரவாதிகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுற்றுலா தலங்கள், பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கக்கூடும். ஆயுத மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் எங்கும் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.  #JammuKashmir #USCitizen 
    ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது தாயார் ஜெயந்தி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியாவுக்கு வந்து எனது தந்தையான பிரேம்குமாரை கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் செய்தார். எனது தாயார் தமிழகத்தில் தான் படித்துள்ளார். அவர், இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பணிநிமித்தமாக இத்தாலி சென்று, அங்கிருந்து அடிக்கடி இந்தியா வந்து செல்வார். கடந்த ஜூலை 1-ந்தேதி எனது தாயார் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி அவரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே விமான நிலைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயாரை விடுவித்து, மீண்டும் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை சேர்ந்த ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் கடந்த 1994-ம் ஆண்டோடு காலாவதியாகி விட்டது. அதன்பிறகு மோசடியாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். எனவே தான் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது. அவற்றை எல்லாம் அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்தி இலங்கை பிரஜை என்று கூறி, அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எனவே, அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். 
    ×