search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palm worker"

    • பனை தொழிலாளிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.
    • நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்

    121-வது பிறந்தநாள் விழா நடந்தது. வட்டார நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் செண்பக பாண்டி யன் தலைமை வகித்தார். நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், நரிப்பையூர் வட்டார நாடார் இளைஞர் பேரவை தலைவர் அந்தோணி ராஜ், நரிப்பையூர்வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் தமிழரசன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிக மதிப்பெண் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கடையில் கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும். பனைமரம் வெட்டுவதை தடுத்து நிறுத்திடும் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு வங்கி கடன் உதவி வழங்க வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை தரவையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் குடிநீர் நன்கு கிடைக்கும். பனைமரம் தேசிய மரமாக அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை வெட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க கிராமத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஜேம்ஸ் விக்டர், அந்தோணி ஜெபமாலை, சிவனேந்த பெருமாள், மிக்கேல், ஜீவராஜ், கந்தப்பழம், முனியசாமி, சரவண பழனி முருகன், சித்திரை பாண்டியன், உதயகுமார், பால்பாண்டி, சுப்பிர மணியன், பெருமாள், லிங்கம் உள்பட கிராம தலைவர்கள் பங்கேற்றனர். நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் ஜோசப் கென்னடி நன்றி கூறினார்.

    ×