என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதிரி பள்ளி தொடங்கி மாணவர்களை சேர்க்க வேண்டும்
- மாதிரி பள்ளி தொடங்கி மாணவர்களை சேர்க்க வேண்டும்.
- சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் 1910-ம் ஆண்டு உதயமானது. ஒருங்கிணைந்த ராமநாத புரம் நிர்வாக காரணங்களுக்காக 1984-ல் விருதுநகர், சிவங்கை, ராமநாதபுரம் என தனித்தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.
தலைநகரமான ராமநாத புரத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த தனியார் மேல் நிலைப்பள்ளிகள் முதல் கடந்த சில ஆண்டுகளுக்குள் தொடங்கிய தனியார் மேல் நிலைப்பள்ளிகள் என 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அரசு சார்பில் நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி மட்டும் உள்ளது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியோ அல்லது இருபாலர் மேல்நிலைப் பள்ளியோ 100 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லை. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாண வர்கள் மாதிரி சிறப்பு பள்ளியில் சேர இயலாத நிலை உள்ளது.
அப்போதைய கலெக்டர் நந்தகுமார் தொடங்கிய மாதிரி பள்ளியில், சிறப்பு ஆசிரியர்களால் அனைத்து பாடங்களும் தரமாக கற்பிக்கப்படுகிறது. மாதிரி பள்ளியில் சேருவதற்கு அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும், என்ற நிபந்தனை உள்ளது. இதனால் ராமநாதபுரம் நகரை சேர்ந்த மாணவர்கள் மாதிரிபள்ளியில் சேர முடியாமல் உள்ளனர். இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்வி சமுக ஆர்வ லர்கள் கூறுகையில், வானம் பார்த்த பூமி, அரசு அதிகாரி களின் பனிஷ்மென்ட் ஏரியா என்ற பெயர் மாறி தற்போது கல்வியில் முன் னேறி உள்ளது. நன்றாக படிக்கும் பொருளாதாரத் தில் பின் தங்கிய மாணவர்கள் நலன் கருதி மாதிரி பள்ளியில் சேருவதற்கு ராம நாதபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என்றனர்.






