search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்
    X

    விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பரிசுகள் வழங்கியபோது எடுத்தபடம்.

    மாநில விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்

    • கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரியில் மாநில விளையாட்டு போட்டி நடந்தது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரை–யூர் நம்மாழ்வார் வேளாண் மை தொழில்நுட்பக் கல் லூரியில் வேளாண்மை கல்லூரிக–ளுக்கு இடையே–யான மாநில அளவிலான விளை–யாட்டுப் போட்டி நடை–பெற்றது.

    இதில் சென்னை, கோவை உட்பட மாநில முழுவதிலும் இருந்து 14 வேளாண்மை கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த 14, 15 ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகளும், பூப்பந்து கூடைப்பந்து, மேஜைப்பந்து, கேரம், எரி–பந்து உள்ளிட்ட போட்டி–கள் நடைபெற்றன.

    நேற்று நடைபெற்ற போட்டிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்கள் பறக்க–விடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு நம் மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி–யின் தாளாளர் அகமது யாசின் தலைமை தாங்கி–னார். கமுதி வட்டாட்சியர் சேதுராமன், முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் இளவரசு, தி.மு.க. மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனிக்கொடி, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் போகர் துரைசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன–தாக கல்லூரி முதல் வர் ஜெயக்குமார் வர–வேற் றார். துணை முதல்வர் திருவேணி நன்றி கூறினார்.

    Next Story
    ×