search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
    X

    புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்விறை தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பூச்சிக்கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்கும், மகப்பேறு சிகிச்சைகளுக்கும் இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மிகவும் பழுதடைந்து காணப்படு கிறது. மேலும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலி யர்கள் கூட மருத்துவ மனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை செய்த போது மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவ மனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மருத்துவ மனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அது தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தர விட்டனர்.

    அதன்படி குடும்ப நல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் 1989-ம் ஆண்டிலிருந்து ஆர்.ஸ் மங்கலம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது சேதமடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர தேவை கருதி பொது சுகாதார பிரிவு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு இ.சி.ஜி. எக்ஸ்ரே மற்றும் பிரசவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×