search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 17-ந்தேதி உள்ளூர் விடுமுறை
    X

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 17-ந்தேதி உள்ளூர் விடுமுறை

    • அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    • ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

    ராமநாதபுரம்:

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

    இந்நிலையில் இந்த வருடம் ஆடி மாத அமாவாசை வரும் திங்கட்கிழமையன்று வருகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜூலை 17-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை தினமான நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×