search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தேைவக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு -அமைச்சர் தகவல்
    X

    கபடி போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    குடிநீர் தேைவக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு -அமைச்சர் தகவல்

    • ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேைவக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி 9-வது வார்டில் கபடி போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை விரைவில் தனியார் இடத்தில் அமைக்கப்படும். கன்னிராஜபுரத்தில் காம ராஜர் சிலையும், கமுதி அருகே ராமசாமி பட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூரில் முத்துராமலிங்கதேவர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு ரூ.2800 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கி கொ டுத்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பார்த்திபனூர், சாயல்குடி யில் புறவழிச்சா லைகள் அமைய உள்ளன. முதுகு ளத்தூர் தொகுதி முன்னேறி வரும் தொகுதியாக மாறி வருகிறது.

    தற்போது முதுகுளத்தூர் தொகுதியில் 19 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. சாலைகளில் கார்கள் நிரம்பி உள்ளன.

    பரமக்குடியிலும் இமானுவேல் சேகரன் சிலை அமைக்க முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்ய வேண்டும். நான் முதுகுளத்தூர் தொகுதிக்கு மட்டும் அமைச்சர் இல்லை. தமிழ்நாடு முழுவதற்கும் அமைச்சர்.

    மாவடட தேவைகளை முதலமைச்சரிடம் கூறி பெற்றுத் தருகிறேன். நமது மாவட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராய் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஷாஜஹான், கவுன்சிலர் பால்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கோவிந்தராஜ், பூபதி மணி, ஆறுமுகவேல், குலாம் முகைதீன், மணலூர் ராமர், வடமலை கிருஷ்ணாபுரம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×