search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survival certificate"

    • ஓய்வூதியருக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
    • இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தபால் அலுவலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மாநில அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1 -ந்தேதி முதல் அவர்களது வீட்டு வாசலில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் பெற்று சமர்ப்பிப்ப தற்கான சிறப்பு ஏற்பாடுகள் தலைமை மற்றும் துணை, கிளை அஞ்சலகங்களில் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தில் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்கு சேவை கட்டண மாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
    • சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 2023 ஆம் ஆண்டிற்குரிய உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அவரவர்கள் பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

    சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.

    குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் பெண் ஓய்வூதியர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்றுடன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மறுமணம் செய்து கொள்ளவில்லை என சான்றிதழ் பெற்று சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க சந்தேகங்கள் மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் கீழராஜவீதி அரண்மனை எதிரில் உள்ள மாவட்ட ஏ. ஐ .டி .யூ .சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரையை 9566715758 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

    • ஓய்வூதியர்கள் உயிழ்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நேர்காணல் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முடிவடைந்தது.
    • இந்த நேர்காணல் முகாம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஷ்வரன் தலைமையில் 3 மாதங்கள் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் உயிழ்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நேர்காணல் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முடிவடைந்தது. இந்த நேர்காணல் முகாம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஷ்வரன் தலைமையில் 3 மாதங்கள் நடைபெற்றது.

    ஓய்வூதியர்கள் நேரடியாக கலந்து கொண்டு தங்களுடைய ஆதார், மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம், மற்றும் ஓய்வூதிய உத்தரவு எண் ஆகியவற்றை வழங்கி விரல் ரேகையை பதிந்து, உயிர் வாழ் சான்றை சமர்ப்பித்தனர்.

    அதுதவிர, வீடு தேடி வரும் தபால்காரரிடம் 70 ரூபாய் கட்டணத்திலும் உயிழ்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29 ஆயிரத்து 280 ஓய்வூதியதாரர்களில் நேற்று வரை 27 ஆயிரத்து 535 பேர் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து விட்டனர். இன்னும் 1745 பேர் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. அவர்களுக்கு மீண்டும் புதுப்பித்தல் நீட்டிப்பு வாய்ப்பு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
    • கொரோனோவால் கடந்த 2 ஆண்டுகளாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசு ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர், 30-ந் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதற்காக தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கொரோனோவால் கடந்த 2 ஆண்டுகளாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது.

    தற்போது ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்தபடி ஜீவன் பிரமான் திட்டத்தில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்.

    இதற்கான கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். நேரில் சென்று வாழ்வுரிமை சான்று சமர்ப்பிக்க முடியாதவர்கள், தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ எண், ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில், டிஜிட்டல்' உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம்.

    இதனை தகுதியுடைய அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அருகி லுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×