என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளி ஒருவருக்கு பட்டாவை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வழங்கி னார்.
116 பேருக்கு ரூ. 24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- ஓரிவயல் கிராமத்தில் 116 பேருக்கு ரூ. 24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இந்த முகாம்களில் அரசின் திட்டங்கள் குறித்து அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஓரி வயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந் தது. ஊராட்சி மன்ற தலை வர் மலர்மதி திருப்பதி வர வேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கி 116 பயனாளிகளுக்கு ரூ. 23.84 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கிராமப் பகுதிகளில் மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்த முகாம்கள் நடைபெறு கின்றன. முகாமில் பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் பகுதிகளில் நடக்கும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இந்த முகாம்களில் அரசின் திட்டங்கள் குறித்து அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து பொது மக்கள் பயன்பெறலாம்.
இன்று நடந்த முகாமில் 114 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதி வாளர் முத்துக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெயஆனந்தன், கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ், கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சர வணன் மற்றும் அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.






