என் மலர்
ராமநாதபுரம்
- பா.ம.க. சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
- சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறுபான்மை பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ரா ஹிம் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல் முன்னிலை வகித்தார்.
மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகையதீன் சிறப்புரை யாற்றினார். ராமநாதபுரம் நகர செயலாளர் பாலகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சை. அக்கிம் கலந்து கொண்டு பேசினார்.
ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். திருப்புல்லாணி பாமக ஒன்றிய செயலாளர் மக்தும்கான் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி உரை கூறினார்.
ஆலோசனைக் கூட்ட த்தில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறை வாசி களை உடனடியாக விடுத லை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வருகின்ற ஜூலை 29-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட மாநாட்டிற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனைத்து பொறுப்பா ளர்களும் சென்று கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
முன்னதாக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவராக பதவி ஏற்று முதல் முறை யாக ராமநாத புரத்திற்கு வருகை தந்த ஷேக் முகை யதீனுக்கு சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தலைவர் இமானு வேல் ஆகியோர் பொன்னா டை அணிவித்து வரவேற்றனர்.
- ரூ.13 லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்நிலை தொட்டியை ராம.கருமாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி வாணி கிராமத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சம் மதிப்பில 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனை திருவாடானை எம்.எல்.ஏ. ராம.கருமா ணிக்கம் திறந்து வைத்தார்.
இந்த விழாவிற்கு சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவள்ளி, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலு வலர் சேவுக பெருமாள், உதவி பொறியாளர் கணபதி சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர் சீனி செய்யது அம்மாள், மாவட்ட காங் பொரு ளாளரும், வாலியா நிறுவ னங்கள் உரிமையாளரு மான ராஜாராம் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.விடம் ஊராட்சி மன்ற தலைவர் யாழினி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றி தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.
அதில் நேரு நகர் நாகப்பா ஊரணியில் வடிகால் கால்வாயை சீரமைத்து தர வேண்டும். மேலச்சோ த்தூரணி அருந்ததியர் குடியிருப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கலையரங்கம் கட்டித் தர வேண்டும், மகா சக்தி நகர் மேற்கு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காங் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இப்ரா ஹீம், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது, பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- மீனவ குடும்பத்திற்கும் நிவாரண நிதி உதவிகள் வழங்க வேண்டும்.
- நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தேசிய கடல் மீனவர், மீனவ மகளிர் சேமிப்பு நிவாரண திட்டத்தின் கீழ் நாட்டுப்படகு மீனவர் பங்குத்தொகை செலுத்தி வருகின்றனர். இதனால் வறட்சி நிவா ரணம் கடலில் இறந்தால் நிவாரண நிதி போன்ற அரசு வழங்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
பெரும்பாலும் இப்பகுதி மீனவர்கள் கல்வியில் பின் தங்கி கடல் சார்ந்த தொழி–லில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில மீனவர்களே படித்து வேறு தொழிலுக்கு செல்கின்றனர். அதிலும் ஒரு சிலரே படித்து அரசு தொழிலுக்குச் செல்வார் கள்.
இந்நிலையில் ஒரு குடும் பத்தில் குடும்ப உறுப்பி–னர்களாக பலர் உள்ள நிலையில், அதில் ஒருவர் அரசு பணி செய்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேமிப்பு மற்றும் நிவாரண நிதி மறுக்கப்படுகிறது.
இதனால் வறட்சி நிவாரண நிதி, கடல் சீற்றங்களால் மீன்பிடிக்கும் போது கடலில் இறந்தால் வழங்கும் நிதியும் மறுக்கப்ப–டுகிறது.
தொண்டி பகுதியில் உள்ள சிலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளைகளை படிக்க வைப்பது தவறா? மேலும் அவ்வாறு அரசு பணி மேற்கொள்ளும் நபர் திரு–மணமாகி குடும்பத்தை கவனிக்காமல் செல்லும் நிலையும் உள்ளது.
எனவேஅரசு பணி மேற்கொள்வதால் குடும்பத் தில் அனை வருக்கும் நிதி மறுக்கப்படுவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண் டும் என அரசுக்கு இப்பகுதி நாட்டு படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுமான பணி, எச்சரிக்கை, Construction work, warning
கீழக்கரை
கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கீழக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் பெரிய கட்டுமானங்கள், வணிக வளாகங்கள் கட்டுவ தற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் தெரு பகுதி களில் வணிக வளாகங்கள் அமைப்பது குறித்து உரிய விதிமுறைகள் பின்பற்றி கட்டுமான பணிகளை மேற் கொள்ள வேண்டும்.
புதிய கட்டுமான பணி களுக்கு அரசின் விதிமுறை கள் தெளிவாக வரையறுக் கப்பட்டுள்ளது. அதன் படி புதிதாக கட்டுமான பணி களில் ஈடுபடுபவர்கள் உரிய அரசு அனுமதி பெற்று கட்டு மான பணிகளில் ஈடுபட வேண்டும்.
மேலும் விதி முறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நகரில் அதிக உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது குறிப்பாக வணிக வளாகங்கள் உரிய அனுமதியோடு கட்ட வேண் டும். நகராட்சி விதிமுறை களை மீறி மிக உயரமான வணிக வளாகங்கள் ஏற் படுத்தியிருந்தால் அதற்கு உரியவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
- மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
கீழக்கரை
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராமநாத புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது மது குடிப்போரின் பழக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் பெரியவர்கள், முதியவர்கள் மட்டும் மது அருந்தி வந்த நிலை மாறி, தற்போது இளைஞர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி மது குடிக்க தொடங்கி விட்டனர். டாஸ்மாக்கில் மது கொள்முதல், விற்பனை ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
100 பொதுக்கூட்டங்கள் நடத்தி மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதன் பின்பும் மது விலக்கு கொண்டு வரவில்லை வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடத்துவோம்.
தி.மு.க. அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெயர் உரிமை தொகை அல்ல. உதவி தொகை என கூறலாம்.
பெண்கள் வாக்குகளை பெற நகைக்கடன் தள்ளுபடி, மாதம் 1000 உரிமை தொகை உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சிவ. பாலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக சத்திரக்குடியில் நடந்த கூட்டத்தில் மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
- பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
பொது இடங்களில் புகைப்பிடித்தலோ, புகை–யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட–னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப் பட்டாலோ, உறுதி செய்யப் பட்டலோ உடனடி அபரா–தமாக முதன்முறையாக ரூ.100, மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக் கப்படும்.
மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்ப–டுத்துவதில்லை.
புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளா–வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், காச–நோய், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட் டினால் உயிரிழக்கின்றனர்.
பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப் பான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்க–ளிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரையரங்கு–கள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது.
ராமநாதபுரம் மாவட் டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியு–டன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப் பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 21 பயனாளிகளுக்கு ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
- ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன்வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட–ரங்கில் கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை–யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 297 மனுக்கள் பெற்று மனுதார–ரின் முன்னிலையில் மனுக் களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க–ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டு–மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்கு–தல் உள்ளிட்டவை தொடர் பாக பொதுமக்கள் மனுக் களை அளித்தனர். அப் போது கலெக்டர் தெரி–விக்கை–யில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்க–ளிடம் பெறக்கூடிய மனுக்க–ளுக்கு உரிய நடவடிக்கை மேற் கொண்டு ஒருமாத காலத்திற் குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும்,
தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர் கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் 6 பய–னாளிகளுக்கும் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் முதலமைச்சரின் பொது–நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்தில் காயம–டைந்த 3 நபர்களுக்கு உயிர் சிகிச்சைக்காக தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை–யினையும் கலெக்டர் வழங் கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந் தராஜூலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறு–பான்மையினர் நல அலு–வலர் சிவசுப்பிரம–ணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி ஆனைகுடி, பள்ளமோர்க்குளம், வாலிநோக்கம், தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப் பாலம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருட்களின் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழிற் சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. பொதுவாக பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.
தற்போது வெயில் சுட்டெரிப்பதால் உப்பள பாத்திகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற மாதங்களில் மழை காலம் என்பதால் காற்றின் ஈரப்பதத்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து திருப்புல்லாணி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது உப்பளங்களில் உப்பு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது.
சீசன் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உப்பளங்களில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை உயர்ந்துள்ளதால் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பத்துக்கு தான் விடியும், நாட்டுக்கு விடியல் கிடைக்காது.
- தேசத்தை துண்டாட கூடிய கட்சி பா.ஜ.க. மட்டுமே.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பத்துக்கு தான் விடியும், நாட்டுக்கு விடியல் கிடைக்காது. என்னிடம் ஆட்சியை கொடுத்தால் தெலுங்கானாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற நூறு சதவீத இடங்களும் தங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்று அம்மாநில முதல்வர் சட்டம் இயற்றியுள்ளார்.
நானும் அதே போல சட்டம் இயற்றுவேன். இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பா.ஜ.க. அவர்களின் வரியையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசால் முடியவில்லை, காரணம் அங்கு கலவரத்தை நடத்துவதே பா.ஜ.க.தான்.
பா.ஜ.க. அல்லாதவர்களை கொலை செய்து வருகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தமிழர்கள் என திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வருகிறது. தேசத்தை துண்டாட கூடிய கட்சி பா.ஜ.க. மட்டுமே. பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை, இப்போதுள்ள சட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது? எதற்காக பொது சிவில் சட்டம்?
நான் முதல்வரானால் நடுக்கடலில் தமிழக மீனவர் கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் கைகளில் வெடிகுண்டு, ஆயுதங்கள் கொடுத்து அனுப்புவேன்.
இவ்வாறு சீமான் பேசினார்.
நிகழ்ச்சியில் சாட்டை திருமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜூ, மாவட்ட தலைவர் நாகூர் கனி, மாவட்ட பொருளாளர் ஓரிக் கோட்டை காளீஸ்வரன் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முரசு பயன்பாடு இல்லாமல் முடங்கி போய் கிடக்கின்றது
- ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ராமேசுவரம் கோவிலில் மன்னர்கள் காலத்தில் இருந்தே தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும் போதும், அது போல் மாலை 3 மணிக்கு நடை திறக்கும் போதும் முரசு ஒலிக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முரசு பயன்பாடு இல்லாமல் முடங்கி போய் கிடக்கின்றது.
குறிப்பாக அதிகாலையில் மற்றும் பகலில் கோவில் நடை திறக்கும்போது இந்த முரசு அடிப்பதற்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் இந்த முரசும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து போய் விட்டது.
தற்போது மன்னர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட இந்த முரசானது வடக்கு நந்தவன தோட்டத்தில் உடைந்து போன பொருட்களோடு சேர்த்து குப்பைகளோடு குப்பையாக வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம் கோவிலில் பாரம்பரியமாக இருந்து வந்த கோவில் நடை திறக்கும்போது அடிக்கப்பட்டு வந்த முரசை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஒலிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
- முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.
கீழக்கரை
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அஹமது அஸ்லம் வர வேற்றார். கூட்டத்தில் பொருளாளரும், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞ ருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் தொடக்க உரைரையாற்றினார். சட்ட ஆலோசகரும், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான சேக் இப்ராகிம் சட்ட சம்பந்தமாக பேசினார்.
கூட்டத்தில் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணைச்செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் செய்யது காசீம், மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது இஸ்மாயில் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். துணைத்தலைவர் மாணிக்கம் இரங்கல் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதை போலீசார் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போதை பொருட்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மீள சமூக, சமுதாய அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட கீழக்கரை மீன் மார்க்கெட், பஸ் நிலையம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால் இந்த கட்டி டங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது கீழக்கரை தாலுகாவாக இருப்பதால் தீயணைப்பு நிலையம் கீழ்க்கரை நகராட்சி பகுதி யில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்போது கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் நகரில் இருந்து தொலைதூரம் அமைந்து இருப்பதால் அதை கீழக்கரை தாலுகா வளா கத்தில் கட்ட அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு தொலை தூர பஸ்கள் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை பஸ் நிலையத்திற்குள் வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது முஹம்மது பாதுஷா, ஹுசைன் அல்லா பக்ஸ், சீனி பாபா பக்ருதீன், ஹசன் பாய்ஸ், சீனி முஹம்மது சேட், பவுசுல் அமீன், அபு பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் திருப்புல்லாணியில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் தொகுப்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் குதுபுதீன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர். மாநில தலைவர் நெல்லை முபாரக் கொள்கை விளக்க சிறப்புரையாற்றினார்.
இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சோமு, கிழக்கு மாவட்ட பொருளாளர் அசன் அலி, மேற்கு சட்ட மன்ற தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொகுதி துனை தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பி னர்கள் பாரூக் ராஜா முஹம்மது, சாதிக் சலீம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தன பீர், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசாத், மேற்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் நவர்சா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுபைர் அப்தீன், முஸ்தாக் அஹமத், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை தலைவர் முபீனா மற்றும் பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புரோஸ் கான், கீழக்கரை 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் சஹீனா பேகம் கிழக்கு, மேற்கு மாவட்ட தொகுதி, நகர, கிளைகளின் நிர்வாகி கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.






