என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகன் பிரகாஷ் (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 20-7-2015 அன்று அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3பேரிடம் ஆசை வார்த்தைகளை கூறி வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து 3 சிறுமிகளையும் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
இது குறித்து அந்த சிறுமிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து இன்று நீதிபதி லியாகத் அலிகான் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 5 வருட சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் ஆபாச படங்களை போட்டு காண்பித்ததற்காக 7 வருட சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதன் மூலம் தந்தை-மகன் இருவரும் 7 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தந்தை-மகன் இருவருக்கும் 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவுடையார்கோவிலை அடுத்த பிராந்தணியைச் சேர்ந்தவர் சின்னையா, மனைவி சரோஜா (வயது 48). இவர் நேற்று அறந்தாங்கி சென்று விட்டு அரசு டவுன் பஸ்சில் பிராந்தணி சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய போது சரோஜா தவறி கீழே விழுந்தார்.
இதில் காலில் பஸ் சக்கரம் ஏறியதால் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கியை அடுத்த வேட்டனூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 60). இவருக்கு கோவிந்தம்மாள், பானுமதி என்ற 2 மனைவிகள், 5 குழந்தைகள். இதில் கோவிந்தம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பிச்சைமுத்து எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து கார்த்திக் எதிர்புறம் செல்ல சாலையை கடக்க முயன்றபோது புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் கார்த்திக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுவன் தனியார் பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து புதிதாக தென் கிழக்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தென் மேற்கு திசையில் நகர்ந்ததால் கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடை விடாமல் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென் மேற்கு திசையில் இருந்து மேற்கு மத்திய வங்ககடல் நோக்கி ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிக்கு நகர்ந்து செல்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந் திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இதேபோல் தென் தமிழகத்திலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும். காற்றழுத்தம் நகர்வதைப் பொறுத்து மழையின் வேகம் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் கடலில் சூறைக்காற்று வீசியது. இதனால் அலைகள் மிகவும் உயர எழுந்தன.
வழக்கமாக தினமும் இந்த பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். ஆனால் காற்றின் வேகம் கடலில் அதிகமாக இருந்ததால் இன்று புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி வழங்கவில்லை. அனைத்து விசைப் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்படகுகள் மட்டும் குறைந்த அளவில் கடலுக்கு சென்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி தாலுகா 13-வது மாநாடு அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள இளங்கோ திருமண மஹாலில் ஞாயிறு மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு வி.லெட்சுமணன் ,எம்.நாராயணமூர்த்தி , எ.வின்னரசி, ஆகியோர் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை மா வட்டக்குழு உறுப்பினர் எ.பால சுப்ரமணியன் ஏற்றினார்.
நகரச்செயலாளர் கே.தங்கராஜ் வரவேற்று பேசினார். தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், தொடக்க உரையாற்றினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் மா.முத்து ராமலிங்கன் வாழ்த்தி பேசினார். தென்றல் கருப்பையா, எ.பாலசுப்ரமணியன், வி.லெட்சுமணன், கே.தங்கராஜ், கே.கணேசன், மேகவர்ணம், எஸ்.சரோஜா, கே.சாத்தையா, வி.ஜெயராமன், எ.ஜான்யோகரெத்தினம்,ஆர்.கருணா, ராதா,ஆகிய பண்ணிரெண்டு கொண்ட புதிய தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.
புதிய அறந்தாங்கி தாலுகா செயலாளராக எ.பாலசுப்ர மணியன் தேர்வு செய்யப்பட்டார். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனை அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும், பயிர் இன்சுரன்ஸிக்கு நில உளவடைதாரரே பதிவு செய்ய வேண்டும், பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய பயிர் கடன் வழங்க வேண்டும், அறந்தாங்கி நகரில் பாதாள சாக்கடைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சமத்துவபுரத்தில் குடியிருப் பவர்களுக்கு வீட்டு வரி ரசீது போட வேண்டும், ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன்-1 துணை மின் பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.
எனவே இந்த மின் பாதையில் உள்ள புதுக்கோட்டை நகரில் உள்ள இந்திரா நகர் 1,2 மற்றும் 3-ம் வீதி, சீனிவாசநகர் 2 மற்றும் 3-ம் வீதி, தஞ்சாவூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என புதுக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராமசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி காமராஜபுரம் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு காமராஜபுரம் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு கொசு உருவாகும் காரணிகள் மற்றும் டெங்கு கொசு உருவாகாமல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த காட்சி விளக்க விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.
மருத்துவர்களிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் தற்பொழுது தினமும் சுமார் 200 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு இம்மையத்தில் 2 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மேலும் 1 மருத்துவர் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று இம்மையத்தில் விரைவில் மகப்பேறு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இம்மையத்திலேயே பிரசவம் பார்த்து பயன் பெறலாம். இப்பகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காமராஜபுரம் பகுதி பொதுமக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்குதல் கோரிக்கையினை ஏற்று பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கும் பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 744 எம்.டி., எம்.எஸ். முடித்த மருத்துவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் 100 சதவீதம் நிரப்பப்பட்டு மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதே போன்று சித்த மருத்துவ பிரிவில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் 200 சித்த மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும் முன்பு செயல்பட்டு வந்த புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, புதுக்கோட்டை சார் ஆட்சியர் சரயு, ஆறுமுகம் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.சுரேஷ் குமார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா, பொது சுகாதார துணை இயக்குநர்கள் பரணிதரன் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதியில் நாம் தமிழர் கட்சியின் திருமயம் தொகுதி மகளிர் பாசறை கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டிமீனா தலைமை வகித்தார். மாநில மகளிர் பாசறை நிர்வாகிகள் திருநங்கை தேவி, இலக்கியா ஆகியோர் மகளிர் உரிமைகள், பாசறையின் கொள்கைகள் பற்றி பேசினர். பேரூந்து நிலையம் முன்பு கட்சிக் கொடியேற்றப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதில் திருமயம் சோபனா, பொன்னமராவதி கார்த் திகா, சிவகங்கை சண்முக வள்ளி, கட்சியின் மண்டலச் செயலாளர் கனகரெத்தினம், ஒன்றியச் செயலா ளர் முருகேஷ், தொகுதிச் செயலாளர் நாகராஜ், கோசலை, ரேவதி, லெட்சுமி, உமா, பிரியா, சிவகாமி, பானுமதி, மலர் கொடி, தேவி, கோகிலா, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கடையாத்துப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த லாரியில் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து சட்டவி ரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் ஜெயராமன் (வயது 23). இவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராமனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை அவரது பெற்றோர், மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு ஜெயராமன் இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி வந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினர். அதன்பிறகு டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்தது. தற்போது ஜெயராமன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாரணி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்தாண்டு அறந்தாங்கி நேரு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அவர் வாங்கிய பணத்தை வட்டியுடன் கடந்த மார்ச் மாதமே செலுத்தி விட்டாராம்.
இருப்பினும் ஆறுமுகம் பாலமுருகனிடம் அவர் வாங்கிய கடனுக்காக ரூ. 2 லட்சத்து 27 ஆயிரம் தர வேண்டும் எனக்கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் மீது கந்துவட்டி தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார், ஆறுமுகம் மீது கந்து வட்டி தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆறுமுகம் அறந்தாங்கி நகரசபை முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல அறந்தாங்கியை அடுத்த பூவற்றகுடியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அறந்தாங்கியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அதில் அசல் தொகையில் ரூ.80 ஆயிரம் கட்டி விட்டார்.
இந்நிலையில் ராஜேந்திரன், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தரவேண்டும் என்று சத்தியமூர்த்தியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் ராஜேந்திரன் மீது கந்து வட்டி தடுப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.






