என் மலர்
செய்திகள்

கந்துவட்டி கேட்டு மிரட்டல்: முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாரணி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்தாண்டு அறந்தாங்கி நேரு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அவர் வாங்கிய பணத்தை வட்டியுடன் கடந்த மார்ச் மாதமே செலுத்தி விட்டாராம்.
இருப்பினும் ஆறுமுகம் பாலமுருகனிடம் அவர் வாங்கிய கடனுக்காக ரூ. 2 லட்சத்து 27 ஆயிரம் தர வேண்டும் எனக்கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் மீது கந்துவட்டி தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார், ஆறுமுகம் மீது கந்து வட்டி தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆறுமுகம் அறந்தாங்கி நகரசபை முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல அறந்தாங்கியை அடுத்த பூவற்றகுடியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அறந்தாங்கியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அதில் அசல் தொகையில் ரூ.80 ஆயிரம் கட்டி விட்டார்.
இந்நிலையில் ராஜேந்திரன், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தரவேண்டும் என்று சத்தியமூர்த்தியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் ராஜேந்திரன் மீது கந்து வட்டி தடுப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story