என் மலர்
செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த தந்தை- மகனுக்கு 7 வருடம் சிறை தண்டனை
ஆபாச படங்களை காண்பித்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தந்தை -மகனுக்கு 7 வருட சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகன் பிரகாஷ் (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 20-7-2015 அன்று அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3பேரிடம் ஆசை வார்த்தைகளை கூறி வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து 3 சிறுமிகளையும் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
இது குறித்து அந்த சிறுமிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து இன்று நீதிபதி லியாகத் அலிகான் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 5 வருட சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் ஆபாச படங்களை போட்டு காண்பித்ததற்காக 7 வருட சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதன் மூலம் தந்தை-மகன் இருவரும் 7 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தந்தை-மகன் இருவருக்கும் 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story