என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை நகர் பகுதியில் நாளை மின்தடை
    X

    புதுக்கோட்டை நகர் பகுதியில் நாளை மின்தடை

    புதுக்கோட்டை நகர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டவுன்-1 துணை மின் பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.

    எனவே இந்த மின் பாதையில் உள்ள புதுக்கோட்டை நகரில் உள்ள இந்திரா நகர் 1,2 மற்றும் 3-ம் வீதி, சீனிவாசநகர் 2 மற்றும் 3-ம் வீதி, தஞ்சாவூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என புதுக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராமசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×