என் மலர்
செய்திகள்

பலத்த சூறைக்காற்று - புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுப்பு
பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து புதிதாக தென் கிழக்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தென் மேற்கு திசையில் நகர்ந்ததால் கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடை விடாமல் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென் மேற்கு திசையில் இருந்து மேற்கு மத்திய வங்ககடல் நோக்கி ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிக்கு நகர்ந்து செல்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந் திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இதேபோல் தென் தமிழகத்திலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும். காற்றழுத்தம் நகர்வதைப் பொறுத்து மழையின் வேகம் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் கடலில் சூறைக்காற்று வீசியது. இதனால் அலைகள் மிகவும் உயர எழுந்தன.
வழக்கமாக தினமும் இந்த பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். ஆனால் காற்றின் வேகம் கடலில் அதிகமாக இருந்ததால் இன்று புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி வழங்கவில்லை. அனைத்து விசைப் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்படகுகள் மட்டும் குறைந்த அளவில் கடலுக்கு சென்றன.

Next Story