என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கியில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
    X

    அறந்தாங்கியில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

    அறந்தாங்கி அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளிய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கடையாத்துப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து சட்டவி ரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    Next Story
    ×