என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 145 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்றிரவு விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மதன் (வயது 23), ஆனந்தன் (45), ராஜ் கண்ணன் (50), சதீஷ் (20) ஆகியோரும், செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வமணி (40), அவரது மகன் சந்தோஷ் (25), சதீஷ் (21), பொன்னுக்குட்டி ஆகியோரும் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, 8 மீனவர்களையும் கைது செய்து, 2 விசைப்பட குகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விசைப்படகுகளுடன் 8 பேரையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்ட விசைப் படகு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து வருகின்றனர்.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும்.
விசைப்படகுகள் இல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையில் இருநாட்டு அரசுகளும் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மேலும் இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், விசைப்படகுகளை மீட்டு தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு ஒவ்வொரு படகின் அமைப்புக்கு ஏற்ப இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் முதல் ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு உள்ள ராஜவீதி தெற்கு 4-வது வீதி சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்தச் சாலையையொட்டி மரவேலைப்பாடுகள் கொண்ட கடைகள் அதிகமாக இருக்கின்றன. இந்தக் கடைகளில் சரக்குகளை இறங்கிவிட்டு கே.ஆர்.ஆர் என்ற பெயர் கொண்ட லாரி ஒன்று சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது, இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டியில் சாலையை நோக்கி வந்தனர். அப்போது, முன்னால் வந்த லாரியை கவனிக்காமல் அவர்கள் வந்தனர்.
திடீரென லாரியில் மோதி ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இதில் இரண்டு பெண்களும் நிலைத்தடுமாறி லாரியின் பின்பக்க சக்கரம் அருகே விழுந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர், லாரியை நிறுத்தினார். இத்னால் அதிர்ஷ்டவசமாக இரண்டு பெண்களும் உயிர் தப்பினர். லாரியின் அடியில் கிடந்த பெண்களை, அருகில் நின்ற பொதுமக்கள் உடனடியாக மீட்டனர். இந்த விபத்தால் இரண்டு பெண்களும் திகைத்துப்போனார்கள்.
டிரைவரின் சாமர்த்தியத்தால் கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு பெண்கள் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழாவிற்கு கல்லூரி தலைவர் வயிரவன் மற்றும் நிர்வாக இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் விழாவினை துவக்கி வைத்து பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.
கல்லூரியின் முதன்மை செயல் இயக்குநர் பாண்டி கிருஷ்ணன், மனிதவள இயக்குநர் மீனா வயிரவன் மற்றும் கல்லூரி முதன்மைச் செயல் அலுவலர் கார்த்திக், செயலர் தியாகராஜன் ஆகியோர் பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தினர்.
விழாவில் முதன்மை விருந்தினராக திருச்சி முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டு, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அரசு வாரியத்தேர்வுகளை எதிர்கொண்டு சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் பட்டயம் பெற்ற 295 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேருரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பை முடித்து பட்டயம் பெறும் நிலையில் சரியான திட்டமிடல் இன்றி வாழ்க்கையை தொடங்கினால் வெற்றி பெற இயலாது போகும். ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனை. எனவே வெற்றிக்கு அடிப்படையான் எண்ணங்களை செம்மைப்படுத்தினால் விதியையும் மதியால் வெல்லலாம்.
எனவே மனதை கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் எளிதில் உயரலாம். ஒரு விவசாயி எப்படி பயிர்களில் களை எடுக்கின்றானோ அதைப்போல் கெட்ட எண்ணங்களை அகற்றி, யாருமே சாதிக்காத செயலை நீ சாதிக்க ஆசைப்பட வேண்டும்.லட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் போன்றது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கடுமையாக உழைத்தால் 5 ஆண்டுகளில் 10,000 மணி நேரத்தில் உயர்வாய்.
வாழ்க்கையில் லட்சியத்தை அடைய நடந்து போகும் போது ஒரே பாதையில் செல். லட்சியத்தை மாற்றாதே. புதிய முயற்சியில் ஈடுபடும் போது உலகம் உன்னை தூற்றும், விடாமுயற்சி செய்தால் உலகம் உன்னை போற்றும். லட்சியத்தை குறிக்கோளாக வைத்துக்கொண்டால் அப்துல் கலாம், ஆப்ரகாம் லிங்கன் போல் வாழ்வில் உயரலாம்.
நம்பிக்கை, முயற்சி, உழைப்பு இம்மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு உசேன்போல்ட் மற்றும் ஜஸ்டின் போன்ற விளையாட்டு வீரர்கள் போல் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கைவைத்தால் ஜெயிக்கலாம். ஒழுக்கமுள்ள மாணவன் ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம், ஆகவே நீங்கள் அனைவரும் ஒழுக்கத்தை பேணி பெற்றோறை பாதுகாத்து அனைத்து வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்றார்.
விழாவில் தாளாளர் ராமையா மற்றும் திட்ட இயக்குநர் லோகநாதன் மற் றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக் களை தெரிவித்தனர். கல்லூரி உப தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையடுத்து நேற்று முன்தினம் மதியம் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். வங்கி காவலாளியான அப்பகுதியை சேர்ந்த மகிமைராஜ் (வயது 50) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்றிரவு அவர் வங்கி முன்பு படுத்திருந்தார். அப்போது வங்கியின் பின்புற சுவர் உடைக்கப்படுவது போன்ற சத்தம் கேட்டது. உடனே எழுந்த மகிமைராஜ் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு வங்கியின் பின்புற பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது அங்கு மர்ம நபர்கள் 5 பேர் வங்கியின் சுவரில் துளை போட்டு கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த மகிமை ராஜ் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் கையில் அரிவாள் வைத்திருந்த மர்ம நபர்கள், மகிமைராஜின் கழுத்தில் அரிவாளை வைத்து, சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன அவர் அங்கேயே அமர்ந்தார். 2 பேர் அவரின் கழுத்தில் அரிவாளை வைத்து நிற்க, 3 பேர் வங்கி சுவரில் துளை போடும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே அப்பகுதிக்கு சிறுநீர் கழிப்பதற்காக பொது மக்கள் சிலர் வந்தனர். அவர்கள் வங்கியின் பின்புறம் இருந்து சத்தம் வருவதை கேட்டு அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் நிற்பதை பார்த்து உடனே திருடன், திருடன் என்று சத்தம் போட்டனர். இதையடுத்து அப்பகுதி வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் பலர் எழுந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் மர்ம நபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வங்கியில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்குள்ள புதர் பகுதியில் நின்று விட்டது.
கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் இந்தியில் பேசியுள்ளனர். எனவே அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் சுதாரித்து செயல்பட்டதன் காரணமாக வங்கியில் இருந்த ரூ.3 கோடி நகை-பணம் தப்பியது. இல்லையென்றால் அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பார்கள்.
இது குறித்து வங்கி மேலாளர் ஆபேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டாளை கீழ்த்தரமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்து சில நூல்களை மேற்கொள்காட்டி தன் கருத்தை நியாயப்படுத்துகிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அநாகரீக பேச்சை இந்து என்ற முறையில்தான் எதிர்க்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோ தூண்டுதலோ கிடையாது. பிரச்சனையை திசை திருப்ப சிலர் அரசியல் சாயம்பூசி வருகின்றனர்.
நாத்திகர்களை கோவிலுக்கு வர எந்த காலத்திலும் அழைப்பு விடுத்ததில்லை. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் ஒதுங்கி கொள்ளலாம். அதை தவிர்த்து விட்டு இந்துக்கள் மீதும், கோவில்கள் மீதும், தெய்வங்கள் மீதும், புனிதமான இந்து மத நூல்கள் மீதும் விமர்சனம் என்ற பெயரில் யாராவது எதையாவது பேசினால் அதை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க மாட்டோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஜீயர் சுவாமிகளை சந்தித்து பா.ஜனதா சார்பில் ஆதரவு தெரிவித்து ஆசீர்வாதம் வாங்கினேன்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி தன் தாய் ராசாத்தி அம்மாள் கோவிலுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவர் குறுக்கிடக் கூடாது என்றுதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு வேதனையளிப்பதாக உள்ளது. ஒரேயடியாக 50 சதவீத கட்டண உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெருமளவில் பாதிப்படைய செய்யும். இதை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ உயர் படிப்பிற்காக டெல்லி செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதுவரை 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஒரு மருத்துவ இடம் காலியாகிறது என்று நினைத்து சிலர் செய்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வாய் திறக்காமல் மவுனம் சாதிப்தோடு கவலையும் படாமல் இருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் இறப்பு குறித்து திவாகரன் காலையில் ஒன்று பேசுகிறார், மாலையில் ஒன்று பேசுகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரீகமாக பேசி வருகிறார். இருப்பினும் 24 மணி நேரமும் ஜெயலலிதாவோடு உடன் இருந்தவர் சசிகலா மட்டும்தான். அவருக்குத்தான் ஜெயலலிதாவின் மரணத்தில் அனைத்து உண்மைகளும் தெரியும். இதுகுறித்து அவர் தான் பதில் கூறமுடியும்.
ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு இஸ்லாமியர்களின் உணர்வை புறந்தள்ளியுள்ளது. ஏற்கனவே முத்தலாக் விவகாரத்திலும் சரி, தற்போது ஹஜ் புனித பயண மானிய ரத்து விவகாரத்திலும் சரி இஸ்லாமிய தலைவர்களோடு கலந்து ஆலோசிக்காமல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் இதற்கு மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு செய்து இருக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் 54 ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து உள்ளேன். ஆனால் தற்போது மாற்றத்தை கொண்டு வருவேன் என்று ரஜினி, கமல் கூறி அரசியலுக்கு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் அதனுடை சூழல் பற்றி புரியும். அவர்களது வெற்றி குறித்து காலம் தான் பதில் கூறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த திருவப்பாடியில் உழவர் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்திற்கு சிங்கவனம் ஜமீன்தார் ராமசாமி மெய்யக்கன் கோபாலர் தலைமை தாங்கினார்.
பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் முதலாவதாக வந்த அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமியின் மாட்டு வண்டிக்கு ரூ.15 ஆயிரத்து 15-ம், இரண்டாவதாக வந்த கண்டனிவயல் நித்தீஸ் முருகன் மாட்டு வண்டிக்கு ரூ.13 ஆயிரத்து 13-ம், 3- வதாக வந்த பொன்பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத் தேவர் மாட்டு வண்டிக்கு ரூ.11 ஆயிரத்து 11-ம் பரிசாக வழங்கப்பட்டன.
நடுமாடு பிரிவில் முதலாவதாக வந்த செல்வனேந்தல் சுந்தர்ராஜன் சேர்வை மாட்டு வண்டிக்கு ரூ.13 ஆயிரத்து 13-ம், இரண்டாவதாக வந்த கூம்பள்ளம் தில்லியப்ப அய்யனார் மாட்டுவண்டிக்கு ரூ.11 ஆயிரத்து 11-ம், 3-வதாக வந்த மாவிளங்காவயல் மாட்டு வண்டிக்கு ரூ.9 ஆயிரத்து 9-ம் பரிசாக வழங்கப்பட்டன.கரிச்ச ன்மாடு பிரிவில் முதலாவதாக விச்சூர் முத்து மாரியம்மன் மாட்டு வண் டிக்கு ரூ.11 ஆயிரத்து 11-ம், 2-வதாக வந்த அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமி மாட்டு வண்டிக்கு ரூ.9 ஆயி ரத்து 9-ம், 3-ஆவதாக வந்த பொன்பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத்தேவர் மாட்டு வண்டிக்கு ரூ.7 ஆயிரத்து 7-ம் பரிசாக வழங்கப்பட்டன.
பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடு களை திருவப்பாடி கிராமத்தினர் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங் குறிச்சியில் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இதனை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இன்று புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 450 காளைகளும், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கி பரிசுகளை வென்றனர். இதேபோல் பல காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடியது. அதன் உரிமையாளர்களும் பல்வேறு பரிசுகளை தட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியே சீறிப் பாய்ந்த காளை ஒன்று வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. அந்த காளை ஒருசில நிமிடங்கள் வரை களத்தில் பார்வையாளர்களை மிரட்டியது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த காளை பார்வையாளர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்தது. இதில் புதுக்கோட்டையை அடுத்த கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஜீவா (வயது 42) என்பவர் மீது பாய்ந்தது.
அவரது கழுத்தை தனது கூரிய கொம்பால் குத்தி தூக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். உடனே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்ற காளையை துரத்தினர். அதன்பின்னரே பார்வையார்கள் பெரு மூச்சு விட்டனர். பலியான பார்வையாளர் ஜீவாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு பார்க்க வந்து பூ வியாபாரி ஒருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கார்த்திகா, மாற்றுத்திறனாளி. மாணவிக்கான சிறப்பாசிரியர்கள் மூலம் கல்வி பயின்று வருகிறார்.
மேலும் நடக்கும் பயிற்சியளிப்பதற்காக உடலியக்க நிபுணர் தங்கவேல், மாணவிக்கு நடை பயிற்சி வழங்கி வந்தார். இம்மாணவிக்கு 2017- 2018ம் கல்வியாண்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
பொன்னமராவதி உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய கல்வி ஒருங்கிணைப்பாளர் புவனேஷ்வரி ஆகியோரின் பரிந்துரையின் கீழ், மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவியை புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் ஆகியோர் நலம் விசாரித்தினர். மேலும் வட்டார வளமயம் மூலம் வழங்கப்படும் உடல் இயக்க பயிற்சிக்கு அனுப்பி மாணவியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புகோவில் சாலையில் பாருடன் கூடிய அரசு டாஸ்மாக் மது பானக்கடை இயங்கி வருகிறது. தமிழக அரசு உத்தரவுப்படி காலை 12 மணிக்குத்தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள மதுபானக்கடை பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடந்தது. வழக்கத்தைவிட பாரில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அப்போது பிலாவிடுதி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 35) என்பவர் மது அருந்த வந்தார். அவருக்கும், பார் ஊழியரான செந்தில் (40) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
ஆத்திரம் அடைந்த செந்தில் தனது நண்பர் பசுபதியுடன் சேர்ந்து மது குடிக்க வந்த ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த ராஜாவின் உறவினர்கள் கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் திரண்டு சாலை மறியல் செய்தனர். அத்துடன் சில தகராறு ஏற்பட்ட டாஸ்மாக் பாரில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு சூறையாடினர். உடனே டாஸ்மாக் கடை மற்றும் பார் இழுத்து மூடப்பட்டது.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. தகவலின்பேரில் விரைந்து வந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிப் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜாவை அரிவாளால் வெட்டியவர்களை உடனே கைது செய்யவேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் பார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். கிராமப்பகுதிகளில் பொங்கல் பண்டிகைகளை கட்டிய நிலையில் அரிவாள் வெட்டு, சாலை மறியல் சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.






