என் மலர்
செய்திகள்

இந்துக்கள் மீது விமர்சனங்கள் செய்தால் பொறுக்கமாட்டோம்: எச்.ராஜா
இந்துக்கள் மீதும், கோவில்கள் மீதும், புனிதமான இந்து மத நூல்கள் மீதும் விமர்சனம் என்ற பெயரில் யாராவது எதையாவது பேசினால் அதை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க மாட்டோம் என எச்.ராஜா கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டாளை கீழ்த்தரமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்து சில நூல்களை மேற்கொள்காட்டி தன் கருத்தை நியாயப்படுத்துகிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அநாகரீக பேச்சை இந்து என்ற முறையில்தான் எதிர்க்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோ தூண்டுதலோ கிடையாது. பிரச்சனையை திசை திருப்ப சிலர் அரசியல் சாயம்பூசி வருகின்றனர்.
நாத்திகர்களை கோவிலுக்கு வர எந்த காலத்திலும் அழைப்பு விடுத்ததில்லை. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் ஒதுங்கி கொள்ளலாம். அதை தவிர்த்து விட்டு இந்துக்கள் மீதும், கோவில்கள் மீதும், தெய்வங்கள் மீதும், புனிதமான இந்து மத நூல்கள் மீதும் விமர்சனம் என்ற பெயரில் யாராவது எதையாவது பேசினால் அதை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க மாட்டோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஜீயர் சுவாமிகளை சந்தித்து பா.ஜனதா சார்பில் ஆதரவு தெரிவித்து ஆசீர்வாதம் வாங்கினேன்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி தன் தாய் ராசாத்தி அம்மாள் கோவிலுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவர் குறுக்கிடக் கூடாது என்றுதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு வேதனையளிப்பதாக உள்ளது. ஒரேயடியாக 50 சதவீத கட்டண உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெருமளவில் பாதிப்படைய செய்யும். இதை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Next Story