என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை: குடும்பத்தினர் அதிர்ச்சி-கண்ணீர்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் அவர்களது குடும்பத்தினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 145 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்றிரவு விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மதன் (வயது 23), ஆனந்தன் (45), ராஜ் கண்ணன் (50), சதீஷ் (20) ஆகியோரும், செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வமணி (40), அவரது மகன் சந்தோஷ் (25), சதீஷ் (21), பொன்னுக்குட்டி ஆகியோரும் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, 8 மீனவர்களையும் கைது செய்து, 2 விசைப்பட குகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விசைப்படகுகளுடன் 8 பேரையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்ட விசைப் படகு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து வருகின்றனர்.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும்.
விசைப்படகுகள் இல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையில் இருநாட்டு அரசுகளும் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மேலும் இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், விசைப்படகுகளை மீட்டு தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு ஒவ்வொரு படகின் அமைப்புக்கு ஏற்ப இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் முதல் ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story