என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே திருவப்பாடியில் மாட்டு வண்டி பந்தயம்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த திருவப்பாடியில் உழவர் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்திற்கு சிங்கவனம் ஜமீன்தார் ராமசாமி மெய்யக்கன் கோபாலர் தலைமை தாங்கினார்.
பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் முதலாவதாக வந்த அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமியின் மாட்டு வண்டிக்கு ரூ.15 ஆயிரத்து 15-ம், இரண்டாவதாக வந்த கண்டனிவயல் நித்தீஸ் முருகன் மாட்டு வண்டிக்கு ரூ.13 ஆயிரத்து 13-ம், 3- வதாக வந்த பொன்பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத் தேவர் மாட்டு வண்டிக்கு ரூ.11 ஆயிரத்து 11-ம் பரிசாக வழங்கப்பட்டன.
நடுமாடு பிரிவில் முதலாவதாக வந்த செல்வனேந்தல் சுந்தர்ராஜன் சேர்வை மாட்டு வண்டிக்கு ரூ.13 ஆயிரத்து 13-ம், இரண்டாவதாக வந்த கூம்பள்ளம் தில்லியப்ப அய்யனார் மாட்டுவண்டிக்கு ரூ.11 ஆயிரத்து 11-ம், 3-வதாக வந்த மாவிளங்காவயல் மாட்டு வண்டிக்கு ரூ.9 ஆயிரத்து 9-ம் பரிசாக வழங்கப்பட்டன.கரிச்ச ன்மாடு பிரிவில் முதலாவதாக விச்சூர் முத்து மாரியம்மன் மாட்டு வண் டிக்கு ரூ.11 ஆயிரத்து 11-ம், 2-வதாக வந்த அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமி மாட்டு வண்டிக்கு ரூ.9 ஆயி ரத்து 9-ம், 3-ஆவதாக வந்த பொன்பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத்தேவர் மாட்டு வண்டிக்கு ரூ.7 ஆயிரத்து 7-ம் பரிசாக வழங்கப்பட்டன.
பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடு களை திருவப்பாடி கிராமத்தினர் செய்திருந்தனர்.






