என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நடைபெறும் நாளன்று விதிமுறைகளை மீறி வசந்தகுமார் எம்.பி. நாங்குநேரி தொகுதிக்குள் வந்தது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் தோல்வி பயத்தால்தான் வசந்தகுமார் எம்.பி. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்வதற்காக சென்றுள்ளார்.
போலீசாரும் சம்பிரதாயத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போலீசார் அவரை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும். இந்த விவகாரத்தில் போலீசாருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த தொகுதியில் வசந்தகுமார் எம்.பி. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் பணப்பட்டு வாடாவை பட்டவர்த்தனமாக செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அவர் பா.ஜ.க.வில் சேரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்காக முயற்சியை பா.ஜ.க. இதுவரை செய்யவில்லை. டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி கட்சி மகத்தான வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் .அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா அறிவாலயத்தின் மூலபத்திரத்தை மு.க. ஸ்டாலின் காட்டாத தன் மூலம் தி.மு.க.வின் சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலத்தில் உள்ளதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துறையை தி.மு.க.விற்காகத்தான் உருவாக்கினார். நான்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு தேசத்துரோகி. தமிழக அரசு அவரை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக சீமான் இதுவரை என்ன செய்து விட்டார். சீமானை போன்ற தீய சக்திகள், பிரிவினைவாதிகள் சமுதாயத்தில் நடமாட அருகதை இல்லாதவர்கள். தமிழக மக்களை திசை திருப்புவதற்காக தற்போது சீமான் இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார் என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பருவமழை காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் போது தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு மற்றும் உடமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்திட வேண்டும்.
பொதுமக்கள் இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தை தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும், வளர்ப்பு பிராணிகள் கொட்டிலில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர் மின் கோபுரங்கள் மற்றும் இரும்பு வேலிகளின் அருகில் நிற்பதோ, தங்குவதோ கூடாது.
கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின் போது மின்னணு சாதனங்களை அறவே பயன்படுத்துதல் கூடாது. இடி, மின்னலின் போது மேற்கூரை வேயப்பட்ட கட்டிடங்களின் கீழ் ஒதுங்க வேண்டும். மிக உயரமான பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் கீழ் தங்குவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், குளங்கள் நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இரும்பு கொடிகம்பம், டி.வி. டிஸ் ஆண்டனா, செங்குத்தான உலோகங்களினாலான சாதனங்களின் அருகில் நிற்கக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் (சைக்கிள் உள்பட) செல்வதை தவிர்க்க வேண்டும். உலோகத்தினாலான குடை மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும். பொது சுகாதாரத்தை பேணி காக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு அதன்படி பொது மக்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நிஜாம் காலனி பேலஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயியான இவர் புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வருகிறார்.
முழுநேர இந்து முன்னணி அமைப்பின் செயல்பாட்டில் இருந்து வரும் வடிவேல், மாவட்டம் முழுவதும் தினந்தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய வடிவேல் தனக்கு சொந்தமான சொகுசு காரை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் முன்பு மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வடிவேல் வெளியே வந்தார்.
வீட்டின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் அங்கு வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனே வடிவேல் வெளியே வந்து பார்த்தபோது, அவரது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்ததால் பல இடங்களில் குளங்கள் நிரம்பின.
கண்மாய்களில் நீர் தேங்கியதால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செம்பாட்டூர் அருகே கீழ முட்டுக்காடு பகுதியில் நேற்று மதியம் வயலில் 50-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நிலக்கடலைகளை பறித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
கீழ முட்டுக்காடு பகுதியிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுக்கு பயந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பாதியில் விட்டுவிட்டு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்திற்குள் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வானத்தில் தோன்றி மறைந்த மின்னல் கூடாரத்தை தாக்கியதில் அதற்குள் நின்றிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதில் வைத்தூரை சேர்ந்த கலைச்செல்வி (வயது 45), லட்சுமியம்மாள் (60) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி (40), விஜயா (45) ஆகியோர் இறந்தனர். வைத்தூர் நடுத்தெருவை சேர்ந்த சரோஜா, நாகலட்சுமி (50), ஜெயலட்சுமி (32), ரங்கம்மாள் (50), தமிழரசி (50), வளர்மதி (40), கோவிந்தம்மாள் (50), ஜெயராணி (40), மலர் (35), மீனாள் (35), பூமணி (40), காவேரி (55), சரோஜா (50), அழகுலட்சுமி, சித்ரா (30), லட்சுமி (50), ராஜம்மாள் (40), கருப்பையா (40) உள்பட 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்னல் தாக்கி 4 பெண்கள் பலியான வைத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
வான்வெளியில் ஏற்படும் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். இது வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒளிக் கீற்றாக பிரிந்து மறைகிறது. மேகங்களில் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சார பாய்ச்சலே மின்னலாகிறது.
பூமி வெப்ப நிலையில் இருந்து குளிர்ச்சியான நிலைக்கு மாறும்போது, மின்னாற்றலில் மாற்றம் ஏற்படும். அப்போது மின்னல் மேலே இருந்து மேக கூட்டங்கள் வழியாக பூமிக்கு வரும். இதனால் காற்றில் துவாரம் ஏற்படும்போது விரிவாக்கம் ஏற்பட்டு இடி உருவாகுகிறது. இடி உருவான 30 விநாடிகளில் மின்னல் பூமிக்கு வரும்.
இந்த மின்னல் 3 வழியாக பூமியை தாக்குகிறது. நேரடியாக தாக்கும்போது 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இதனால் இடி ஏற்பட்ட 30 விநாடிகளுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும். திறந்த வெளியிலோ, உயரமான மரங்கள் இருக்கும் இடங்களில் நின்றாலோ பாதிப்புகள் ஏற்படும்.
அதுபோல்தான் நேற்று திறந்தவெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களை மின்னல் தாக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகி, 22 பேர் காயமடைந்துள்ளனர். இடி விழுந்த அடுத்த விநாடி அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான கட்டிட பகுதிக்கு சென்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்.
உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு 24 பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கிறார்கள். 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை காயம் அடைகின்றனர். மின்னல் தாக்கினால் பெரும்பாலும் இதயம், நரம்புகளை அதிகம் செயலிழக்க செய்து விடும். மின்னல் தாக்கி காயம் அடைந்தவர்கள் அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம்.
எனவே இடி, மின்னல் தாக்கும்போது திறந்தவெளி, மரங்களுக்கு கீழ் நிற்பது போன்றவற்றை தவிர்த்து கட்டிட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை அருகே வைத்தூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செம்பாட்டூர் அருகே கீழ முட்டுக்காடு பகுதியில் நேற்று மதியம் வயலில் நிலக்கடலைகளை பறித்து கொண்டிருந்தனர். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வைத்தூரை சேர்ந்த கலைச்செல்வி (வயது 45), லட்சுமியம்மாள் (60) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி (40), விஜயா(45) ஆகியோர் இறந்தனர். வைத்தூர் நடுத்தெருவை சேர்ந்த சரோஜா, நாகலட்சுமி (50), ஜெயலட்சுமி ( 32), ரங்கம்மாள் (50), தமிழரசி (50), வளர்மதி (40), கோவிந்தம்மாள் (50), ஜெயராணி (40), மலர் (35), மீனாள் (35), பூமணி (40), காவேரி (55), சரோஷா (50), அழகுலட்சுமி, சித்ரா (30), லட்சுமி (50), ராஜம்மாள் (40), கருப்பையா (40) உள்பட 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை கலெக்டர் உமாமகேஸ்வரி சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அம்மாப்பட்டினம் தெற்கு தெரு ஓட்டாங்கரை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் சென்றது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடையும் புகுந்தது.
இதன் காரணமாக பொதுமக்கள் தூங்க முடியாமல் இரவு முழுவதும் தவித்தனர். அம்மாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. அறந்தாங்கி பகுதியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது. மழையால் அந்த பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விழாவில் பங்கேற்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
ஆதனக்கோட்டை-13, பெருங்களூர்-15.80, புதுக்கோட்டை-55.20, ஆலங்குடி- 4.80, கந்தர்வக்கோட்டை -5, கறம்பக்குடி-32.20, மழையூர் -15.20, திருமயம்-6.20, அரிமளம்-37.20, அறந்தாங்கி-7, ஆயங்குடி-3.40, நாகுடி-3.60, மீமிசல்-54.70, ஆவுடையார்கோவில்-25.40, மணமேல்குடி-40.60, கட்டுமாவடி- 40.40, இலுப்பூர்-2, குடுமியான் மலை-2, அன்னவாசல்-5, விராலிமலை-15.20, உடையாளிபட்டி-12.20, கீரனூர்-2.80.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 398 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 7.30 மணியளவில் லேசான தூரலுடன் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக திருச்சி மாநகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில், மழையால் வியாபாரம் பாதிக்கப்படுவதால் தரைக் கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவுமில்லி மீட்டரில் வருமாறு:-
கடவூர்-46.4, பாலவிடுதி- 48.4., மயிலம்பட்டி-14, பஞ்சப்பட்டி-17.2, குளித்தலை-10, கிருஷ்ணராயபுரம்-7. திருச்சி, புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதன் மூலம் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்விரி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் அடப்பன்வயல் 3-ம்வீதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் வினோத் சக்கரவர்த்தி (வயது 27). நேற்றிரவு இவர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கும்பல் வந்தது. அவர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வினோத் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.அதற்குள் அந்த கும்பல் அவரை மடக்கி பிடித்து சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் வினோத்தின் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வினோத்தை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதில் வினோத்திற்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பழிக்குப்பழியாக கார்த்திக்கேயன் ஆதரவாளர்கள், வினோத்தை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த நாகுடியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி தேவிபாலா. இவர்களுக்கு யுகேஷ், யுதர்சனா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். டீ மாஸ்டரான அசோகன் சில மாதங்களுக்கு முன்பு வெட்டிவயல் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கணவர் அசோகன் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த தேவிபாலா குடும்பத்தினர், அசோகன் மரணத்திற்கு பிறகு குடும்பத்தை நடத்தவே சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தனது வாழ்வாதாரத்தை எண்ணி வருந்திய தேவிபாலா, கணவன் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய வாகனம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்தார்.
இந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த தேவிபாலா, மனம் உடைந்து தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அவரது உறவினர்கள் தேவிபாலா, அவரது குழந்தைகள் யுகேஷ், யுதர்சனா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (17-ந்தேதி) தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் காணப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலோர தமிழகத்தின் வளி மண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவியது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வைத்தூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்த போது இடி தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடி தாக்கியதில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






