search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டையில் மழை"

    கஜா புயல் சீற்றம் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, புதுக்கோட்டையில் தற்போது மழை பெய்ய தொடங்கி வருகிறது. #CycloneGaja #TNRains
    புதுக்கோட்டை:

    இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கஜா புயல் அதிதீவிர புயலாக மாறியது. கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. - நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் எங்கும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன

    கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கஜா புயல் சீற்றம் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, புதுக்கோட்டையில் தற்போது மழை பெய்ய தொடங்கி வருகிறது. #CycloneGaja #TNRains
    ×