என் மலர்
நாகப்பட்டினம்
- வட்டியுடன் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.
- திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டார்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் அசலாம் (வயது43).
இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
வியாபாரம் தொடர்பாக அசலாம் மலேசியாவுக்கு சென்று வரும்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பட்டமங்க ளத்தை சேர்ந்த பில்லப்பன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பில்லப்பன் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் தனக்கு ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும், அதை விற்று பராமரிக்க வேண்டும் எனக்கூறி அசலாமிடம் ரூ.2 கோடியே 13 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
அப்போது வட்டியுடன் கடனை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.
இதேபோல பழக்கத்தின் பேரில் பூம்புகார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனிடம் ரூ.28 லட்சம், உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் உதயகுமார் என்பவரிடம் ரூ.31 லட்சம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நவநீதிகிருஷ்ணன் என்பவ ரிடம் ரூ.10 லட்சம் என கடன் வாங்கி உள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ., தொழில் அதிபர்கள் உள்பட 4 பேரிடம் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பி தராமல் பில்லப்பன் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த 4 பேரும் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக கடந்த 25.4.2022 அன்று நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த பில்லப்பன் தலைமறைவாகி விட்டார்.
போலீசார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, விமான நிலைய போலீசார் பில்லப்பனை பிடித்து, நாகை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரை நேற்று முன்தினம் நாகை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட னர்.
பின்னர் நாகை கோர்ட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் பில்லப்பனை சிறையில் அடைத்தனர்.
- விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தோட்டக்க லைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு, தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
- நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால் தலைமை தாங்கினார்.
வட்டாச்சியர் ரமேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் ரம்யா வரவேற்றார்.
இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை,கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை என வருவாய் துறை சார்பில் 28 பயனாளி களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா 3 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.
இதில் தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
- குறுவைப் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
- போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் கருகும் குறுவைப் பயிர் சாகுபடியை காப்பாற்ற உடனடியாக கூடுதலாக முறையில்லாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
வாட்டாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- சிக்கல் சிங்கார வேலன் கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ளார் சிங்கார வேலவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு புகழ்மிக்க இவ்வாலயத்தில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னர் சிங்காரவேலவர் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கு பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் பால் விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது ஆடிக்கிருத்திகை என்பதால் நாகப்பட்டினம் மட்டுமின்றி திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார்.
- கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் - தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14).
இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலிவுற்ற நிலையில் இருந்த கோகுலின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 6-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பன்னீர்செல்வம் உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கோகுல் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய தாத்தா இளங்கோ (75) மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் வந்ததை அடுத்து இளங்கோவின் கைகளில் மின்சாரம் தாக்கவே அச்சத்தில் மின்கம்பியை தூக்கி வீசியதாகவும், மின்வயர் கோகுல் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கோகுல் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு கோகுல் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோகுலின் தாத்தா இளங்கோ வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயதே ஆன சிறுவன் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவமும், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் காமேஷ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முட்டம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- முன்னதாக பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் முட்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்ப றைகள் திறக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு தேசிய பசுமை படை மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
முன்னதாக தேசிய பசுமை படை மற்றும் கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வள கழகத் தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நாகை நகரவைத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நாகூர் ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் தலைமையாசிரியை வள்ளி தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
- விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
இந்த முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
- படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர்.
வேதாரண்யம்:
நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடப்பது உண்டு. இந்நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறைமுகம் கடல் பகுதியில் சுமார் 4 நாட்டிக்கல் தொலையில் ஒரு படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கு இன்று காலை தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த படகையும், அதில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு வேதாரண்யம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 25), ஸ்ரீகாந்த் (37), ரீகன் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்படும்.
வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
முகாமுக்கு வருபவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இதற்கு முன் விண்ணப்பம் அளித்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.
எனவே, நாகை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விரதமிருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
- 7-ந் தேதி திரவுபதை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உடையார்பாளையம் மகேந்தி ரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடந்தது. தொடர்ந்து, கடந்த 5ந் தேதி அரவாண் களப்பலியும், 6-ந் தேதி அர்ச்சுணன் தபசும், 7-ந் தேதி படுகள நிகழ்ச்சியும், பின், திரவுபதை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர், மாலை திரவுபதை அம்மன் பரிவார தேவதைகளுடன் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று, அக்னி குண்டம் முன்பு நிறுத்த ப்பட்டது.
பின், விரதமிருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனா்.
முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.
அன்னதான பணியில் கிராமமக்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டனர். இதில் வேதாரண்யேஸ்வரா் கோவில் ஆதீனவித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளமும் வாசிக்கப்பட்டது.
மேலும் சிவன், பார்வதி உள்பட பல்வேறு சுவாமி வேட மணிந்து இளைஞர்களில் வீதிஉலாவின் போது வலம் வந்தனர்.
- வாய்மேடு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
- பொதுமக்களுக்கு வேஷ்டி, புடவை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டில் நாகை மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பி னருமான பழனியப்பன் தலைமை தாங்கினார்.
முன்னதாக ஆயக்கார ன்புலத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, பின் வாய்மேடு சமத்து வபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து, வாய்மேட்டில் நடந்த நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு வேஷ்டி, புடவைகள், தென்ன ங்கன்று கள் வழங்கினார்.
இதில் இந்தோனேஷியா தொழிலதிபர் திராவிட மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், சுப்ரமணியன், செந்தமிழ்ச்செல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






