என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி மஞ்சப்பை வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கிய அமைச்சர்
- முட்டம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- முன்னதாக பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் முட்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்ப றைகள் திறக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு தேசிய பசுமை படை மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
முன்னதாக தேசிய பசுமை படை மற்றும் கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வள கழகத் தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நாகை நகரவைத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நாகூர் ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் தலைமையாசிரியை வள்ளி தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






