திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம்

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாமில் நாகை எம்.எல்.ஏ. ஷாநவாஸ் நலத்திட்டங்கள் வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாமில் நாகை எம்.எல்.ஏ. ஷாநவாஸ் நலத்திட்டங்கள் வழங்கினார்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால் தலைமை தாங்கினார்.

வட்டாச்சியர் ரமேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய் ஆய்வாளர் ரம்யா வரவேற்றார்.

இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை,கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை என வருவாய் துறை சார்பில் 28 பயனாளி களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா 3 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

இதில் தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com