என் மலர்
நாகப்பட்டினம்
- மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
- பக்தர்கள் அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் வாணங்காடு ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு போட்டும், முடி இறக்கவும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்பு பண்டைய கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பனை மட்டை ஓலைகளில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
- மேலப்பிடாகை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாகப்பட்டினம்:
திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மேலப்பிடாகை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வாழக்கரை, மீனம்பநல்லூர், களத்திடல்கரை, வில்லுவிநாயகர்கோட்டம், காரப்பிடாகை, நாட்டிருப்பு, கீழையூர், சோழவித்யாபுரம், செம்பியன்மாதேவி,
பாலகுறிச்சி மற்றும் திருக்குவளை மின்பாதையில் உள்ள கடைத்தெரு, கே.கே.நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகப்பட்டினம் உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகர் தெரிவித்துள்ளார்.
- ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.
தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.
- பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.
விழாவில் பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்ச மிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு போட்டும், முடி இறக்கையும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்பு, பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.
இதில் ஏராளமான கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து, அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
- படுகாயம் அடைந்த வனிதாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பூவதேவன்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வனிதாகுமாரி (வயது 49). இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாண்டியன் திருவாரூரில் வசித்து வருகிறார். வனிதாகுமாரி தனியாக பூவதேவன்காடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளிவில் வனிதாகுமாரி வீட்டை திறந்து வைத்து கொண்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வனிதாகுமாரியிடம் கழுத்தில் கிடந்த நகையை கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் கையில் இருந்த கத்தியால் வனிதாகுமாரியின் காது மற்றும் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த வனிதாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் வனிதாகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
- பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
- பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை நகராட்சி அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. முகப்பு பகுதியில் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- வெங்கடாஜலபதி சன்னதியில் கம்பவிளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.
- பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
முன்னதாக தெத்தேரியி லிருந்து புனித நீராடிய பக்தா்கள் கம்பவிளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, வடை மாலை, வாழைத்தார் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் அரிச்சந்திரா புராண நாடகம், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, விளக்கு பூஜை, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் நிறைவு நாளை யொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். முன்னதாக வெங்கடாஜலபதிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா நிர்வாகக்குழுவினரும், தேத்தாகுடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.
- 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- முடிவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியில் மாவட்டத்தில் முதன்முறையாக தனியார்பாரம்பரிய வீர சிலம்ப கழகம் சார்பில் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் ஜூனியர், சப் ஜூனியர் ,சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தனித்திறன் மற்றும் தொடு முறை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு, சுருள்வாள், குத்துவரிசை உள்ளிட்ட போட்டிகள் நடுவர் மேற்பார்வையில் நடைபெற்றன. இதில் ஏராளமான சிறுவர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் சிலம்பாட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.
- வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
ஆடி மாத கடைசி பிரதோஷத்தை யொட்டி வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சுவாமிக்கும், நந்திகேஸ்வ ரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சுவாமி சன்னதியில் சரவிளக்கு ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது.
பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம் பகுதி கோவில்கள் இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாக்குடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழகர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
- கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெ ருவில் கருகி வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற உரிய தண்ணீர் திறந்து விடக்கோரியும் கருகி போன நெற்பயிருக்கு நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தம் ,மகேந்திரன், மங்கையர்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேதார ண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாசி ல்தார் சுரேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது.
இதனால் திருத்து றைப்பூண்டி_ நாகப்ப ட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை - அண்ணா பேட்டை காமாட்சி அம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது
திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர் முன்னதாக காமாட்சி அம்மன் பெத்தாரண்ய சுவாமி முனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.
விளக்கு பூஜை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர்
- பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
- தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடன் திறந்து விட வேண்டும்.
கடந்த 2 மாதங்களாக கூட்டு குடிநீர் சரிவர வராத காரணத்தினால் அவதிப்படும் கிராம மக்களை பாதுகாத்திட பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை மற்றும் பாதிப்படைந்த பயிர்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை உடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் சிறப்புரையாற்றினார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், மாவட்டக்குழு கருணாநிதி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் அருள்ஒளி, நகரச் செயலாளர் ராஜேந்திரன்.
இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளா் பழனியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






