உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.
விளக்கு பூஜை நடந்தது.
விளக்கு பூஜை நடந்தது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை - அண்ணா பேட்டை காமாட்சி அம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது

திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர் முன்னதாக காமாட்சி அம்மன் பெத்தாரண்ய சுவாமி முனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.

விளக்கு பூஜை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com