என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த வெங்கடாஜலபதி.
70-வது ஆண்டு கம்பசேவை நிறைவு விழா
- வெங்கடாஜலபதி சன்னதியில் கம்பவிளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.
- பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
முன்னதாக தெத்தேரியி லிருந்து புனித நீராடிய பக்தா்கள் கம்பவிளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, வடை மாலை, வாழைத்தார் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் அரிச்சந்திரா புராண நாடகம், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, விளக்கு பூஜை, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் நிறைவு நாளை யொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். முன்னதாக வெங்கடாஜலபதிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா நிர்வாகக்குழுவினரும், தேத்தாகுடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.






