என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை
- படுகாயம் அடைந்த வனிதாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பூவதேவன்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வனிதாகுமாரி (வயது 49). இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாண்டியன் திருவாரூரில் வசித்து வருகிறார். வனிதாகுமாரி தனியாக பூவதேவன்காடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளிவில் வனிதாகுமாரி வீட்டை திறந்து வைத்து கொண்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வனிதாகுமாரியிடம் கழுத்தில் கிடந்த நகையை கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் கையில் இருந்த கத்தியால் வனிதாகுமாரியின் காது மற்றும் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த வனிதாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் வனிதாகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.






