என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தவிர்க்க முடியாத காரணத்தால் தான் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கட்டணம் உயர்த்தப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகத்தின் பொருளாதார சுமை, எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலையேற்றம் போன்றவைகளால் வேறு வழியின்றி தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
மனநினைவுடன் தமிழக அரசு பஸ்கட்டணத்தை அமல்படுத்த வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #busfarehike #ministerosmanian
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணி அளவில் காளி வழியாக மணல்மேட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மணல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரிகள் முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக மாணவ- மாணவிகள் மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் இரவு 7 மணி வரை காத்திருந்தும் மணல்மேடுக்கு செல்ல அரசு பஸ் வராததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியும், மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. உடனே போலீசார், அங்கிருந்து மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தி வேன் மூலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்து சிறப்பு பஸ் இரவு 7.30 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் 8.30 மணி அளவில் மாணவ-மாணவிகள் சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீண்ட நேரமாகியும் மாணவ-மாணவிகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் பரிதவித்தனர். #tamilnews
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நாகை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புனித ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சீர்காழி சரவணன் தலைமையில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கல்யாண ராமன், லஷ்ட்சுமணன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை.சொக்கலிங்கம், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இராமசிதம்பரம், நகர தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர் ஷாஜகான், மாவட்ட பொதுசெயலாளர் கே.கமல நாதன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கனகசபை, கலை இலக்கிய பிரிவு மாவட்டதலைவர் சி.வேல்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். #tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடியில் வேதாரண்யம், கீழ்வேளுர், நாகை ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் பா.ம.க பொதுக்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசு காவிரி மேலாண்மை நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய- மாநில அரசுகள் தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாத அரசாகவும், வஞ்சிக்கும் அரசாகவும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கொள்கை, கோட்பாடு மற்றும் போராட்டங்கள் நடத்துகின்ற ஒரே கட்சி பா.ம.க.தான்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை முறையாக வழங்கப்பட வில்லை.
தற்போது மகாராஷ்டிரா மாநிலம் போன்று விவசாயிகளின் தற்கொலை சாவு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் அரசுகள் தான். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குரிய எந்தவித கடன்களும் முறையாக வழங்கப்படுவதில்லை.
அதே போல விவசாயத்திற்குரிய ஈடுபொருள்களும் மானிய விலையில் வழங்காமல் தொடர்ந்து அரசுகள் ஏமாற்றி வருகிறது.
இதனால் இதுபற்றி ஆலோசனை நடத்த சென்னையில் உழவர் பேரியக்கம் சார்பில் நாளை (20-ந் தேதி) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
வேதாரண்யம் கடலில் மூழ்கி இறந்த 5 மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் லாரி செட்டில் டிரைவராக வேலை பார்ப்பவர் புஷ்பவனத்தை சேர்ந்த அற்புதநவீன்(23). இவர் சம்பவத்தன்று லாரியை திறுத்துறைப் பூண்டி சாலையில் திருப்ப முயன்ற போது வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து தரக்குறைவாக பேசி தகராறு செய்தனர்.
இதைப் பார்த்த அருகிலிருந்த கடைக்காரர் மாரியப்பன் கேட்டபோது அவரையும் தரக்குறைவாக பேசி செல்போனில் மேலும் சிலரை அழைத்து அவர் கடையை தாக்கியுள்ளனர். இதில் டிரைவர் அற்புதநவீன் மற்றும் கடைக்காரர் மாரியப்பன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக டிரைவர் அற்புதநவீன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இண்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சம்பந்தப்ட்ட ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலு மகன் வினோத்(23) ஆயக்காரன்புலம்-மூன்றாம் சேத்தியைச் சேர்ந்த வாசு என்ற வீரசேகரன்(24) முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுவுடைமூர்த்தி மகன் பார்த்திபன்(26) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். #tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக் காட்டுத்துறை சேர்ந்த 20 பேர் நேற்று தை அமா வாசையையொட்டி கடலில் குளிக்க சென்றனர்.
படகை ஆறுக்காட்டுத் துறையை சேர்ந்த ரகூம்(வயது 30) என்பவர் ஓட்டினார்.
பின்னர் அவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்காக கடற்கரையோரம் படகில் இருந்தப்படியே நீரில் குதித்தனர்.
அப்போது ஆறுக்காட்டுத் துறை சேர்ந்த பிரவீன்குமார் (20), பரத் (16), யுகேந்திரன் (17), கனிஷ்குமார் (18), ராஜாமணி (16) ஆகியோர் கடலில் குளித்தனர். இதில் அவர்கள் குளித்த பகுதி சேறாக இருந்ததால் அவர்கள் சிக்கிகொண்டனர். இதில் அவர்கள் 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மற்றவர்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி மூச்சு திணறி உயிருக்கு போராடினர். உடனே அவர்களை கடலில் புனித நீராடி வந்த படகுகளில் வந்தவர்கள், மற்றும் மீனவர்கள் மீட்டு கொண்டு வந்தனர். சசின் (17), குகன் (19) ஆகிய இருவரும் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேதராமன் (19), நிதிஷ்குமார் (17), பிரசன்னகுமார்(20) ஆகிய 3 பேரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலில் மூழ்கி பலியான 5 பேருமே மாணவர்கள் ஆவர். பலியான பரத், தோப்புத்துறையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் படித்து வந்தார். யுகேந்திரன் தஞ்சையில் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கனிஷ்குமார், ராஜாமணி ஆகியோர் நாகை அருகே பாப்பாகோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். பிரவீன்குமார் பட்டுக்கோட்டையில் ஐ.டி.ஐ. யில் படித்து வந்தார்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 5 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியானதால் கிராம மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை ஆர்.டி.ஓ. வேலுமணி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆறுக்காட்டுத்துறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கடலில் மூழ்கி 5 மாணவர்கள் பலியானதை பற்றி உருக்கமான தகவல்களை கிடைத்துள்ளது.
படகில் பயணம் செய்த மாணவர்கள் கடற்கரையை நெருங்கிய போது ரோந்து பணியில் இருந்த போலீசார் , இது ஆழமான பகுதி. இங்கு இறங்கி குளிக்க கூடாது என எச்சரித்தனர்.
இதை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் சேற்றில் சிக்கியுள்ளனர். இதில் நீச்சல் தெரியாத 5 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்பது தெரிய வந்தது. #tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான படகில் அப்பகுதியை சேர்ந்த வடுகநாதன், சுப்பிரமணியன், மணிகண்டன், அழகேசன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் கோடியக்கரை கடலில் தென்கிழக்கு பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் மீனவர்களை மிரட்டி இவர்கள் பிடித்து வைத்திருந்த சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கத்தியால் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மீனவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
இதைத் தொடர்ந்து வேதாரண்யம் வந்த வடுகநாதன், சுப்பிரமணியன், மணிகண்டன், அழகேசன் ஆகியோர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்து தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் அடுத்த ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விமல் (வயது 15). சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் விமல் குளிக்க சென்றான்.
அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு விமல் சென்றதால் தண்ணீரில் தத்தளித்தான். இதை அவனது நண்பர்கள் கவனிக்கவில்லை.
பின்னர் சிறிதுநேரம் கழித்து நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கரை ஏறினர். அப்போது விமல் காணாததை கண்டு திடுக்கிட்டனர். குளத்தில் தண்ணீரில் விமல் மூழ்கியது தெரிய வந்தது.
இதையடுத்து சீர்காழி தீயணைப்பு நிலையத் தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து குளத்தில் விமல் உடலை தேடினர். சுமார் 2 மணி நேரம் போராடி விமல் உடலை மீட்டனர்.
பின்னர் மாணவன் விமல் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொங்கல் பண்டிகையன்று குளத்தில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன் (வயது 55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி குணசுந்தரி (50), இவர்களுக்கு சரண்யா (22), சுகன்யா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
மகள் சரண்யாவுக்கும், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறையில் பணியாற்றும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சரண்யா, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் சந்தித்து பேசி விட்டு விக்னேஸ்வரன் வெளியே சென்று விட்டார்.
இந்தநிலையில் மாலையில் கண்ணனின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு வீட்டில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர். இதைக்கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரண்யாவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கணவரை பிரிந்து சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்ததால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்று போலீசார் விசாரித்து வந்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரண்யாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு விக்னேஷ்வரன் தொல்லைப்படுத்தியது என தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரும் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சரண்யாவுக்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன் (வயது 55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வீட்டின் மேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி குணசுந்தரி (50), மகள்கள் சரண்யா (22), சுகன்யா (20). மகள் சரண்யாவுக்கும், விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சரண்யா, தனது கணவர் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரது மனைவியிடம் பேசிவிட்டு விக்னேஸ்வரன் வெளியே புறப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை அக்கம் பக்கத்தினர் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கண்ணன் கடைக்கு சென்றனர்.
அப்போது கடை பூட்டியே கிடந்தது. பின்னர் அவர்கள், கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் உள்ள 2 அறைகளில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சரண்யாவின் கணவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
இலங்கை வெளிமடையை சேர்ந்த முகமது சித்திக் மகள் ஜெசிமா (வயது 29) இவர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2008-ம் ஆண்டு துபாயில் வேலை பார்த்து வந்தேன். அங்கு நாகை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த முகமது நியாஸ் மகன் நஜிமுதீன் என்பவர் தனியார் வங்கியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவர் மூலம் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் சொந்த ஊர் சென்று தொழில் செய்வதாக கூறி 30 பவுன் நகைகளை வாங்கி வந்தார். பின்னர் அவர் என்னை சந்திக்க வில்லை.
அவர் குறித்து நான் விசாரித்த போது அவர் குத்தாலம் பகுதியை சேர்ந்த ஒரு இந்து பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்து உள்ளதும், மேலும் சீர்காழியை சேர்ந்த ஒரு பெண்ணையும், கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து எனது நகையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து நஜிமுதீனை தேடி வருகிறார். #tamilnews






