search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student strike"

    • மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது மழையூர் கிராமம். இங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அங்கு வந்த 6 பேர் அந்த மாணவனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர்.

    இதில் அந்த மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திரண்டனர்.

    மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.

    தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனிடையே மாணவரை தாக்கியவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 6 கல்லூரி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சரியான நேரத்தில் மாணவர்கள் சென்று வர காலை, மாலை இரண்டு வேலையும் பேருந்துகள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தருமபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்ல வேண்டும். ஆனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் நகர பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படுவதால் மாணவர்களால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

    அதனால் சரியான நேரத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர காலை, மாலை இரண்டு வேலையும் பேருந்துகள் இயக்கக்கோரி இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரிக்கு பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் கை துண்டான மாணவனுக்கு நிவாரணம் கேட்டு பள்ளி மாணவ -மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேரை கூவத்தூர் அருகில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக நேற்று முன்தினம் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு என்பவர் தன்னுடைய சொந்த மினிவேனில் அழைத்துச் சென்றார்.

    ஆலத்தூர் அருகே சென்றபோது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜின் வலது கை துண்டானது. மேலும் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. வண்டியை ஓட்டிச்சென்ற உடற்கல்வி ஆசிரியர் காயம் ஏற்படாமல் தப்பினார்.

    இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியர் அன்பரசுவை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உயர் சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளி எதிரில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார், வட்டாட் சியர் ராஜ்குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×