என் மலர்
செய்திகள்

இலங்கை பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய குத்தாலம் வாலிபர்: போலீசில் புகார்
மயிலாடுதுறை:
இலங்கை வெளிமடையை சேர்ந்த முகமது சித்திக் மகள் ஜெசிமா (வயது 29) இவர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2008-ம் ஆண்டு துபாயில் வேலை பார்த்து வந்தேன். அங்கு நாகை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த முகமது நியாஸ் மகன் நஜிமுதீன் என்பவர் தனியார் வங்கியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவர் மூலம் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் சொந்த ஊர் சென்று தொழில் செய்வதாக கூறி 30 பவுன் நகைகளை வாங்கி வந்தார். பின்னர் அவர் என்னை சந்திக்க வில்லை.
அவர் குறித்து நான் விசாரித்த போது அவர் குத்தாலம் பகுதியை சேர்ந்த ஒரு இந்து பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்து உள்ளதும், மேலும் சீர்காழியை சேர்ந்த ஒரு பெண்ணையும், கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து எனது நகையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து நஜிமுதீனை தேடி வருகிறார். #tamilnews






