என் மலர்
செய்திகள்

ஹஜ் பயண மானியம் ரத்து: மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
புனித ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நாகை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புனித ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சீர்காழி சரவணன் தலைமையில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கல்யாண ராமன், லஷ்ட்சுமணன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை.சொக்கலிங்கம், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இராமசிதம்பரம், நகர தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர் ஷாஜகான், மாவட்ட பொதுசெயலாளர் கே.கமல நாதன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கனகசபை, கலை இலக்கிய பிரிவு மாவட்டதலைவர் சி.வேல்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். #tamilnews
Next Story






