search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரட்டியடிப்பு"

    • அப்பகுதியில் தளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    • மின் இணைப்பை துண்டித்து யானைகள செல்ல வழிவகை செய்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஜவளகிரி ஆகிய வனப்பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.

    இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து 2 யானைகள் பிரிந்தன. இந்த யானைகள் நேற்று தளி பெரிய ஏரிக்கு சென்று தண்ணீரில் நீந்தியும் குளித்தும் கும்மாளமிட்டன. ஏரியில் 2 யானைகள் முகாமிட்டு இருக்கும் தகவல் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் யானைகளை பார்க்க அப்பகுதியில் திரண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் யானைகளின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அப்பகுதியில் தளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இதுதவிர மின்சார வாரிய துறை ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு யானைகள் செல்லும் வழித்தடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பை துண்டித்து யானைகள செல்ல வழிவகை செய்து வருகின்றனர்.

    மேலும் அந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
    • நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு குடிநீர் தாகம் எடுத்ததால் அந்த கடையில் ஜக்கில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தார். அதனை கண்ட டீ கடை உரிமையாளர் அண்ணாதுரை (59) தண்ணீர் குடித்த சிறுவன் சித்தார்த்தை திட்டியுள்ளார். இதனை கேட்ட சிறுவனின் தாத்தா வையும் விரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குப்பன், அவரது பேரன் சித்தார்த் ஆகியோர் டீக்கடைக்கு சென்று டீ கேட்டுள்ளனர்.  அப்பொழுது கடையின் உரிமையாளர் அண்ணாதுரை என்பவர் 'நேற்று தானே உங்களை விரட்டினேன் மீண்டும் ஏன் இங்கே வர்ரீங்க, நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்,

    இதனைத் தொடர்ந்து மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குப்பன், பின்னர் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் டீக்கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்புத் திட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடைவிதித்துள்ளனர்.
    • நீரோட்டம் மாற்ற நிலை காரணமாக கடலில் மீன் வரத்து சரிவர இருக்காது.

    கடலூர்:

    தமிழக அரசு சமீபகாலமாக சுருக்கு மடிவலை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. மீறி பயன்ப டுத்தினால் பயன்படுத்துவோரை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும் பயன்படுத்துவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த சுருக்குமடிவலை பிரச்சினையால் ஒரு சில மீனவர்களுக்கு மானியம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுருக்குமடிவலை பயன்படுத்தாமல் இருக்க கடலூர் மீனவ கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    தற்போது கடலில் ஏற்பட்ட பருவக்காற்று அதிகரித்தல் மற்றும் நீரோட்டம் மாற்ற நிலை காரணமாக கடலில் மீன் வரத்து சரிவர இருக்காது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து சுருக்குமடி வலையை கொண்டு வந்து பயன்படுத்த மீனவர்கள் கடந்த 30-ம் தேதி கோரிக்கையாக தேவனாம்பட்டினம் தாழங்குடா நல்லவாடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் ஆகியோர் தலைமையில் மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதற்கு அதிகாரிகள் போலீ சார்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் சுருக்கு மடி வலை சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பை சேர்ந்த மீனவர்களையும் அழைத்து போலீசார் சுருக்கு முடி வலையை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து அனுப்பினார். இந்நிலையில் புதுவையில் இருந்து கடலூர் துறைமுகம் வழியாக தேவனாம்பட்டினத்திற்கு மூன்று சிறிய படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை மீனவர்கள் கொண்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மீன்வளத்துறை அலுவலர் சதுர்கான் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் போலீசார் கடலூர் துறைமுகம் தேவனாம்பட்டினம் முகதுவாரம் போன்ற பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுவையில் இருந்து சுருக்குமடி வலையை கொண்டு வரும் மீனவ கும்பலைப் பிடிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதுவையில் இருந்து 3 சிறிய படகுகளில் மீனவ கும்பல் ஒன்று சுருக்குமடி வலையுடன் முகத்துவாரம் வழியாக வந்த போது திடீரென முகதுவாரத்தில் தண்ணீர் குறைய தொடங்கியது. இதனால் நடுக்கடலில் மூன்று படகுகள் தரை தட்டி நின்றது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது 3 படகுகளில் சுருக்குமடி வலையை ஏற்றி வந்தவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பார்த்தவுடன் உடனே கடல் வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தவேல், கணேசன் கோவிந்தன் மற்றும் சில மீனவர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இன்று காலை முதலே மீன்வனதுறை அதிகாரிகள் தேவனாம்பட்டினம் தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்ப்பட்டு டுஉள்ளனர்.

    • பெண் குழந்தை பெற்றதாக கூறி இளம்பெண் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
    • இது சம்பந்தமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சுந்தரி ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்யாதேவி (வயது 24) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மானது.

    திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தில் வாடகை வீட்டில் குடிேயறினர். அவர்களுடன் ராஜேஷ்கண்ணனின் அக்காள் அனுராதாவும் தங்கியிருந்தார்.

    ராஜேஷ் கண்ணனுக்கு சரண்யாதேவியை விட அதிக வயது என்று கூறப்படுகிறது. அதனை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறி தனது கணவரிடம் சரண்யாதேவி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யாதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், பெண் குழந்தை பெற்றதாக கூறி சரண்யாதேவியை அவரது கணவர் மற்றும் கணவரின் அக்காள் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தனது குழந்தையுடன் சரண்யாதேவி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர் மற்றும் அவரது அக்காள் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ராஜேஷ்கண்ணன் மற்றும் அவரது அக்காள் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×