மங்கலம்பேட்டையில் டீ குடிக்க சென்ற நரிக்குறவர் சமூகத்தினர் விரட்டியடிப்பு: கடை உரிமையாளர் கைது

குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்.
மங்கலம்பேட்டையில் டீ குடிக்க சென்ற நரிக்குறவர் சமூகத்தினர் விரட்டியடிப்பு:  கடை உரிமையாளர் கைது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு குடிநீர் தாகம் எடுத்ததால் அந்த கடையில் ஜக்கில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தார். அதனை கண்ட டீ கடை உரிமையாளர் அண்ணாதுரை (59) தண்ணீர் குடித்த சிறுவன் சித்தார்த்தை திட்டியுள்ளார். இதனை கேட்ட சிறுவனின் தாத்தா வையும் விரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குப்பன், அவரது பேரன் சித்தார்த் ஆகியோர் டீக்கடைக்கு சென்று டீ கேட்டுள்ளனர்.  அப்பொழுது கடையின் உரிமையாளர் அண்ணாதுரை என்பவர் 'நேற்று தானே உங்களை விரட்டினேன் மீண்டும் ஏன் இங்கே வர்ரீங்க, நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்,

இதனைத் தொடர்ந்து மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குப்பன், பின்னர் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் டீக்கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்புத் திட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com