search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  பரபரப்பு சுருக்கு மடி வலையுடன்  வந்த மீனவர்கள் விரட்டியடிப்பு  பதட்டம்- போலீஸ் குவிப்பு
    X

    கடலூர் முதுநகர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கடலூரில் பரபரப்பு சுருக்கு மடி வலையுடன் வந்த மீனவர்கள் விரட்டியடிப்பு பதட்டம்- போலீஸ் குவிப்பு

    • மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடைவிதித்துள்ளனர்.
    • நீரோட்டம் மாற்ற நிலை காரணமாக கடலில் மீன் வரத்து சரிவர இருக்காது.

    கடலூர்:

    தமிழக அரசு சமீபகாலமாக சுருக்கு மடிவலை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. மீறி பயன்ப டுத்தினால் பயன்படுத்துவோரை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும் பயன்படுத்துவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த சுருக்குமடிவலை பிரச்சினையால் ஒரு சில மீனவர்களுக்கு மானியம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுருக்குமடிவலை பயன்படுத்தாமல் இருக்க கடலூர் மீனவ கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    தற்போது கடலில் ஏற்பட்ட பருவக்காற்று அதிகரித்தல் மற்றும் நீரோட்டம் மாற்ற நிலை காரணமாக கடலில் மீன் வரத்து சரிவர இருக்காது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து சுருக்குமடி வலையை கொண்டு வந்து பயன்படுத்த மீனவர்கள் கடந்த 30-ம் தேதி கோரிக்கையாக தேவனாம்பட்டினம் தாழங்குடா நல்லவாடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் ஆகியோர் தலைமையில் மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதற்கு அதிகாரிகள் போலீ சார்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் சுருக்கு மடி வலை சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பை சேர்ந்த மீனவர்களையும் அழைத்து போலீசார் சுருக்கு முடி வலையை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து அனுப்பினார். இந்நிலையில் புதுவையில் இருந்து கடலூர் துறைமுகம் வழியாக தேவனாம்பட்டினத்திற்கு மூன்று சிறிய படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை மீனவர்கள் கொண்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மீன்வளத்துறை அலுவலர் சதுர்கான் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் போலீசார் கடலூர் துறைமுகம் தேவனாம்பட்டினம் முகதுவாரம் போன்ற பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுவையில் இருந்து சுருக்குமடி வலையை கொண்டு வரும் மீனவ கும்பலைப் பிடிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதுவையில் இருந்து 3 சிறிய படகுகளில் மீனவ கும்பல் ஒன்று சுருக்குமடி வலையுடன் முகத்துவாரம் வழியாக வந்த போது திடீரென முகதுவாரத்தில் தண்ணீர் குறைய தொடங்கியது. இதனால் நடுக்கடலில் மூன்று படகுகள் தரை தட்டி நின்றது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது 3 படகுகளில் சுருக்குமடி வலையை ஏற்றி வந்தவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பார்த்தவுடன் உடனே கடல் வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தவேல், கணேசன் கோவிந்தன் மற்றும் சில மீனவர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இன்று காலை முதலே மீன்வனதுறை அதிகாரிகள் தேவனாம்பட்டினம் தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்ப்பட்டு டுஉள்ளனர்.

    Next Story
    ×