என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் இளையராஜா(வயது 32). மீனவர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவுக்கு சென்றார்.
நேற்று மாலை திருவிழா முடிந்த பின்னர் இளையராஜா தனது குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், பெரியகுத்்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.
நேற்றும் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதை தொடர்ந்து தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
தொடர்ந்து 3-வது நாளாக மீன்வர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து இல்லை. மக்கள் கூட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. சூறைக்காற்று ஓய்ந்து மீன்பிடிக்க செல்ல இன்றும் 3 நாட்களாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் மாவட்டம் களப்பாலில் இருந்து நேற்று டேங்கர் லாரியில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருத்துறைப் பூண்டி நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கருவேலங்கடை என்ற இடத்தில் வந்த போது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது.
இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணை முழுவதும் வெளியேறி வயல் வெளிகளில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிரேன் மூலம் மீட்டு வேறு ஒரு டேங்கர் லாரியில் ஏற்றினர்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அம்பிகா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 4 மாத குழந்தை உள்ளது. ஏற்கனவே அம்பிகாவுக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் 2-வதாக முருகனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அம்பிகாவின் தந்தை ராமமூர்த்திக்கு முருகன் போன் செய்தார். அதில் உங்கள் மகள் அம்பிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி மற்றும் உறவினர்கள் மல்லியம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
மகளின் சாவில் அவருக்கு சந்தேகம் இருந்தது. இது குறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் என் மகள் அம்பிகாவின் கழுத்தில் காயம் இருக்கிறது என்றும், அவளது சாவில் மர்மம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆன நிலையில் அம்பிகா இறந்தது பற்றி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி பகுதி கனக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். விவசாயி. இவரது மகன் புஷ்பராஜ்(வயது26). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியபோது சேதுரஸ்தா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காவல்சரகம் சந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது49). இவரது மனைவி சத்யவாணி(40). இவர்களிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த மாதம் 29-ந்தேதி அவர்களிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் ஆத்திரத்தில் ரவிக்குமார் மனைவி சத்யவாணியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சத்யவாணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து அவரது தாய் நாகம்மாள் தலைஞாயிறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், கொலை வழக்காக ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கடந்த 2-ந் தேதி நடந்த தேரோட்டத்தில் தேரில் சிக்கி கோவில் குருக்கள் பலியானார்.
இந்த சோகம் மறைவதற்குள் வேதாரண்யம் அருகே நடந்த மாரியம்மன் கோவில் ஆடி தேரோட்டத்தில் பக்தர் பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் ஆயக்காரன் புலம் 1-ம்சேத்தி பகுதியில் திங்கள் சந்தையடியில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மிகப்பழமையானது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆடிப் பெரு விழா விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கியத் திருவிழாவான தேரோட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டம் அப்பகுதியில் உள்ள குறுகலான வீதிகள் வழியாக மணல் நிறைந்த சாலையில் நடந்தது.
நள்ளிரவு 1.30 மணியளவில் தேர் அப்பகுதி வழியே சென்றபோது தேர் வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கொத்தனார் பஞ்சநாதன்(வயது60), விவசாயி குமரேசன்(64) ஆகிய இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது தேரின் சக்கரம் பஞ்சநாதன் தலையில் ஏறி இறங்கியது. முருகேசன் கை, கால்களில் சக்கரம் ஏறியதால் அவரும் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து பஞ்சநாதனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்த குமரேசனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வாய்மேடு இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த பஞ்சநாதனுக்கு பூங்கொடி என்ற மனைவியும், பாஸ்கரன் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர்.
கோவில் விழா தேரோட்டத்தின் போது தேர் சக்கரம் ஏறி பக்தர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த அருவிழ மங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 35), விவசாயி.
இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நாககுடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (19) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு முன்பு கவுசல்யாவும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பாக்கிய ராஜிக்கு கவுசல்யாவை திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த திருமணத்திற்கு கவுசல்யா விருப்பமில்லை என்று தெரிகிறது. தனது முடிவை அவர் பெற்றோரிடம் தெரிவித்தார்.ஆனால் இந்த காதல் திருமணத்தை அவரது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் பாக்கியராஜிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தாய் வீட்டுக்கு சென்ற கவுசல்யா தனது காதலனை சந்தித்து பேசியுள்ளார் .
அப்போது இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடந்து இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
தனது மனைவி காதலனுடன் சென்றதை அறிந்த பாக்கியராஜ் மிகுந்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதனால் வீட்டில் இருந்த வயல் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 40வது நாளில் மனைவி காதலனுடன் சென்றதால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீர் வரும் பிரதான குழாயில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிகளவில் வெளியேறி வீணாகிறது. இந்த குழாய் உடைப்பு பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சீர்காழி உட்கோட்ட காவல்துறை, அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பில் ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமை வகித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். சீர்காழி டி.எஸ்.பி ஆர்.வந்தனா பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு குறித்து மாணவிகளிடம் விளக்கி பேசினார்.
தொடர்ந்து மாணவிகள் 300 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. வந்தனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். இதில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் பாரி, காவலர் கோபால் மற்றும் ஆசிரியைகள், பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீர் வரும் பிரதான குழாயில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிகளவில் வெளியேறி வீணாகிறது. இந்த குழாய் உடைப்பு பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் அரசன் காலனியை சேர்ந்தவர் முகமது நாகு சலாம் (வயது 34 ) இவர் தனது குடும்பத்துடன் நாகை பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் கோபித்துக் கொண்டு அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த முஹம்மது நாகு சலாம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






