search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
    X
    பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    சீர்காழியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி- டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்

    குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சீர்காழி உட்கோட்ட காவல்துறை, அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்றது.

    சீர்காழி:

    குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சீர்காழி உட்கோட்ட காவல்துறை, அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பில் ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமை வகித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். சீர்காழி டி.எஸ்.பி ஆர்.வந்தனா பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு குறித்து மாணவிகளிடம் விளக்கி பேசினார்.

    தொடர்ந்து மாணவிகள் 300 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. வந்தனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். இதில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் பாரி, காவலர் கோபால் மற்றும் ஆசிரியைகள், பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×