search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanker lorry collapsed"

    தொப்பூர் அருகே நேற்று இரவு டேங்கர் லாரி கவிழ்ந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் விடிய , விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தருமபுரி:

    மாராட்டியம் மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இருந்து கோவில்பட்டிக்கு மாட்டு இறைச்சி கொழுப்பு ஆயில் ஏற்றி கொண்டு ஒரு டேங்கர் லாரி புறப்பட்டு வந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தை சேர்ந்த முத்துகுமரன் (வயது 38) என்பவர் ஓட்டிவந்தார்.

    அந்த டேங்கர் லாரி தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று இரவு 12.30 மணியளவில் வந்தது. அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது அந்த லாரி திடீரென்று தனது கட்டுபாட்டை இழந்து நிலைத்தடுமாறி கவிழந்தது. இதில் லாரியில் இருந்து மாட்டு இறைச்சி கொழுப்பு ஆயில் ரோட்டில் ஆறாக ஓடியது. அந்த லாரியின்  பின்னால் வந்த மற்றொரு லாரி வேகமாக வந்து மோதியது. இதை பின்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து வந்த கேரளா தனியார் சொகுசு பஸ்சும், அதன் பின்னால் வந்த மற்றொரு டேங்கர் லாரியும் அடுத்தடுத்து வந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரளா பஸ்சின் முன்புறம், பின்புறம் சேதமானது.

    இந்த தொடர் விபத்தால் இன்று மதியம் 10 மணி வரை தொப்பூர் கணவாய் வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். முதலில் போக்குவரத்து சரி செய்வதற்காக தொப்பூர் கணவாய் பகுதி ஒரு வழிபாதையாக மாற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். அப்போது வாகனங்கள் ஒரு வழிப் பாதையில் இருபுறங்களிலும் ஊர்ந்து சென்றன. 

    அப்போது ஆங்காங்கே வாகனங்கள்  முந்தி செல்வதில் முயன்றபோது மினி சரக்கு ஆட்டோ, தனியார் டிராவல்ஸ் பஸ்சும், லாரியும், காரும் மோதி கொண்டு சிறுசிறு விபத்துக்கள் அரங்கேறியது. ரோட்டில் ஆறாக ஓடிய ஆயிலால் மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மண்ணை 500 மீட்டருக்கு மேல் போலீசார் கொட்டி சரி செய்தனர்.

    டேங்கர் லாரி கவிழ்ந்து தொப்பூர் கணவாய் அருகே உள்ள மேச்சேரி பிரிவு ரோட்டில் இருந்து வெள்ளக்கல் வரை விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், இருபுறங்களிலும் வாகனங்கள் இன்று மதியம் 1 மணி வரை ஊர்ந்து செல்லும் நிலை தொடர்ந்ததால் தொப்பூர் அருகே உள்ள முத்தம்பட்டி வழியாக பொம்மிடி-சேலம் ரோட்டில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
    ×