என் மலர்
மதுரை
- பாலமேடு அருகே நாளை மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்ப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள வலையப்பட்டி மற்றும் எர்ரம்பட்டி பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (29-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையார் அணை, எர்ரம்பட்டி, தேவசேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- விவசாயி-லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் முத்துராமு (வயது34), விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த அவர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்தை குடித்துவிட்டார்.
மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அவரது மகன் மணிமாறன் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கரையாம்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது42), லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் சுமதி, கணவரை பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் சித்து வருகிறார்.
இந்தநிலையில் விரக்தியில் இருந்து வந்த முத்தையா டி.கல்லுப்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி இரும்பு படிக்கட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருக்கல்யாணம் 2-ந் தேதி நடக்கிறது.
- திருக்கல்யாணத்திற்கு சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வான வருகிற 30-ந் தேதி பட்டாபிஷேகம், 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 3-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள்.
கோவிலின் உள்ளே நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள். இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுவாமியை பார்க்க பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் போலீசார் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் திருக்கல்யாணம் நடைபெறும் பகுதி மற்றும் அங்கு பக்தர்கள் எந்தெந்த வழிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பக்தர்கள் எவ்வித தொந்தரவு செய்யாமல் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை எங்கு நிறுத்தலாம். முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதற்காக ஆவணி மூலவீதிகள், மாசி வீதிகள் மற்றும் மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கமிஷனர் ஆய்வு செய்தார். அதில் மிகவும் முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் மேலஆவணி மூலவீதி தெற்கு பகுதியிலும், அதில் பிங்க் நிற பாஸ் வைத்திருப்பவர்கள் வடக்கு ஆவணி மூலவீதியிலும், நீல நிற பாஸ் வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூலவீதியிலும், பொதுமக்கள் வாகனங்கள் மேற்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தேர்திருவிழா நடைபெறும் போதும் பொதுமக்கள் வாகனங்கள் மாரட் வீதிகளில் நிறுத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
- ஒரே நாளில் 850 பேர் டிக்கெட்டை பெற்று சென்றனர்.
- ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு ஆகும். இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 2,500 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 3,200 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். 500 ரூபாய் பதிவில் 2 டிக்கெட்டுகளும், 200 ரூபாய் பதிவில் 3 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.
இந்த கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைய தளம் மூலம் கடந்த 22-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர்முன்பதிவு செய்திருந்தனர்.
டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டணச்சீட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவுக் கட்டண டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று முதல் திருக்கல்யாண டிக்கெட் வினியோகம் தொடங்கியது. அதில் டிக்கெட் ஒதுக்கீடு செய்தவர்கள் தங்களுக்கு வந்த குறுந்தகவலை காண்பித்து டிக்கெட்டை பெற்று சென்றனர்.
முதல் நாளான நேற்று இரவு வரை ரூ.500 டிக்கெட் 370 பேரும், ரூ.200 ரூபாய் டிக்கெட்டை 480 பேரும் பெற்று சென்றனர். வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். திருக்கல்யாண டிக்கெட்டை பெறுபவர்கள் நேற்று காலை முதல் கோவிலில் கூட்டம், கூட்டமாக வந்து வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
- காலை நிலவரப்படி விநாடிக்கு 334 அடியாக வந்து கொண்டிருக்கிறது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. நேற்று விநாடிக்கு 346 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 334 அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 101.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 101.49 அடியாக சரிந்தது.
- சதக் அப்துல்லாவுக்கும், அவருடன் மது குடித்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் சதக் அப்துல்லா (வயது29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட அவர், பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார்.
தற்போது குற்ற சம்பவங் களில் ஈடுபடாமல் இருந்து வந்த சதக் அப்துல்லா, வெளியூருக்கு செல்பவர்களுக்கு தனியார் பஸ்களில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று நள்ளிரவு சிலருடன் மது குடிக்க சென்றுள்ளார்.
சதக் அப்துல்லா உள்ளிட்ட 6 பேரும் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கழிவறைக்கு பின் பகுதியில் இருக்கும் காலியிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சதக்அப்துல்லாவுக்கும், அவருடன் மது குடித்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சதக் அப்துல்லாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி சதக் அப்துல்லாவின் தலையில் போட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இதையடுத்து அவரை கொன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் கொலை நடந்ததால், சதக் அப்துல்லா கொல்லப் பட்டதை யாரும் பார்க்க வில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்கிருந்த கழிவறைக்கு ஒருவர் வந்திருக்கிறார்.
அப்போது அங்கு ரத்த வாடை வீசியதால் சந்தேகமடைந்த அவர், கழிவறைக்கு பின் பகுதியில் சென்று பார்த்த போது சதக் அப்துல்லா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக கிடந்த சதக் அப்துல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சதக் அப்துல்லாவை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை கண்டறிவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சதக் அப்துல்லாவுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்று அவரது குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சதக் அப்துல்லா நேற்று இரவு 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், அவரை பழக்கமான நபர்களே அழைத்து சென்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சதக் அப்துல்லாவின் நெருங்கி பழகியவர்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களில் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு காமிராவில் நள்ளிரவு நேரத்தில் 5 பேர் ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் தான் சதக் அப்துல்லாவை கொன்ற கொலையாளிகளாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொலையாளிகள் 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகரின் பிரதான பஸ் நிலையமான பெரியார் பஸ் நிலையத்தின் அருகில் நள்ளிரவில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர்.
- மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. எனவே உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரித்து வரு கிறது. பொதுமக்கள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், கிர்ணி பழம் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் மாட்டுத் தாவணி பழ மார்க்கெட்டில் பழங்கள் ரசாயன கல் வைத்து செயற்கை முறை யில் பழுக்க வைக்கப்படுவ தாக மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தொடர்ச்சி யாக புகார் வந்தது. எனவே அங்கு அதிரடியாக சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்த னர்.
அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று இரவு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு செய்தனர். அங்கு உள்ள சுமார் 140 கடைகளும் தணிக்கை செய்யப்பட்டது.
அப்போது சில கடை களில் மாம்பழம், திராட்சை, கிர்ணி பழம், வாழைப்பழம் ஆகி யவை செயற்கை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டறி யப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாது காப்பு துறை அதி காரிகள் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப் பட்ட 154 கிலோ மாம்பழம், 45 கிலோ திராட்சை, 60 கிலோ தண்ணீர்பழம், 18 தார் (420 கிலோ) வாழைப் பழங்கள் என மொத்தம் 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.
மாட்டுத்தாவணி வியாபாரிகள் கடந்த சில மாதங்களாகவே பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிலோ கணக்கில் பழங்கள் அழுகி உள்ளன. அவற்றை யும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக ளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
உடலுக்கு தீமை விளைவிக்கும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சுதேசி விழிப்புணர்வு மாநாட்டிற்கு அணி திரண்டு வர வேண்டும்.
- மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் நான் (மைக்கேல் ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது.
அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் கார், வேன்கள் மூலம் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
- மதுரை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கோச்சடையை சேர்ந்தவர் குமார் தேவரகொண்டா (வயது43). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, டோக் நகரில் நடந்து வந்தார். அப்போது குப்பைத்தொட்டி அருகே பதுங்கி இருந்த 2 பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்ன அனுப்பானடி, சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராஜா ஸ்ரீதர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற பாலமுருகன் மற்றும் நந்தி உள்பட சிலர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
மதுரை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் கபடி, மாட்டு வண்டி பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 30-ந் தேதி சத்திரப்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி நடத்துகிறார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன அதேபோல் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற மாடுபிடி வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், புல்லட் பைக் மற்றும் கட்டில், பீரோ, மின்விசிறி, குத்துவிளக்கு, பாத்திரங்கள், கடிகாரம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காத வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் தகரத்தினால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக இன்று வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் நேரு பாண்டி, வக்கீல் கலாநிதி, மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீர ராகவன், சிறைச்செல்வன், மதிவாணன், பூமிநாதன், பிரேம்குமார், கௌரிசங்கர், ராஜேஷ் கண்ணன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
- சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது.
மதுரை
திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை தரப்படுவது இல்லை. எனவே அவர்கள் பாலியல் மற்றும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் ஏற்படுத்தித் தருவது என்று மதுரை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ('டான்சாக்ஸ்') முடிவு செய்தது. இதன்படி மாவட்ட அளவில் சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் சுயதொழில் ஏற்படுத்த மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் பிரதர் சிகா மற்றும் அனியம் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 'டான்சாக்ஸ்' மாவட்ட திட்ட மேலாளர் ஜெய பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் முதற் கட்டமாக 40-க்கும் திருநங்கைகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சுவாமிநாதன், அனியம் அறக் கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், பிரதர் சிகா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பானுமதி, ராஜேசுவரி, பக்கீர் வாவா மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்/
- தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் வலியுறுத்தினார்.
மதுரை
இந்து அமைப்பு சார்பில் மதமாற்று தடைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் பேசியதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்களை தமிழக அரசு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






