search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
    X

    சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.

    சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

    • சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

    மதுரை

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் கபடி, மாட்டு வண்டி பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 30-ந் தேதி சத்திரப்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி நடத்துகிறார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன அதேபோல் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற மாடுபிடி வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், புல்லட் பைக் மற்றும் கட்டில், பீரோ, மின்விசிறி, குத்துவிளக்கு, பாத்திரங்கள், கடிகாரம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காத வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் தகரத்தினால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக இன்று வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் நேரு பாண்டி, வக்கீல் கலாநிதி, மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீர ராகவன், சிறைச்செல்வன், மதிவாணன், பூமிநாதன், பிரேம்குமார், கௌரிசங்கர், ராஜேஷ் கண்ணன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×