search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministerial Participation"

    • பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன.
    • பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

    விழுப்புரம்:

    செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கவரை ஊராட்சியில் ரூ38 லட்சம் மதிப்பில் செயல்படுத்த உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கவரை ஊராட்சிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் விளக்க உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில் பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

    அதன்படி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜா ராம் ஊராட்சி உறுப்பி னர்கள் சதீஷ், தாட்சாயினி, சங்கர், தினேஷ், கலைவாணி, சிவகாமி, பூங்காவனம், பச்சையம்மாள் ஊராட்சி செயலாளர் கனகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

    மதுரை

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் கபடி, மாட்டு வண்டி பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 30-ந் தேதி சத்திரப்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி நடத்துகிறார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன அதேபோல் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற மாடுபிடி வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், புல்லட் பைக் மற்றும் கட்டில், பீரோ, மின்விசிறி, குத்துவிளக்கு, பாத்திரங்கள், கடிகாரம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காத வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் தகரத்தினால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக இன்று வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் நேரு பாண்டி, வக்கீல் கலாநிதி, மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீர ராகவன், சிறைச்செல்வன், மதிவாணன், பூமிநாதன், பிரேம்குமார், கௌரிசங்கர், ராஜேஷ் கண்ணன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஜி. பழம்ரவி பங்கேற்று பேசினார். 2017 முதல் 2020 வரை இந்த கல்லூரியில் 5 துறைகளில் படித்த சுமார் 450 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தாளாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு துறை செயலாளர் நாராயணன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    ×