search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "convocation ceremony"

    • சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
    • 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.

    முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

    விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
    • பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

    பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.

    தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.

    பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.

    உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

    பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
    • முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக் வழங்கினர்.

    உடன்குடி:

    உடன்குடி பெரிய தெரு இமாம் மகளிர் அரபிக் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாக்கள் 4 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் அபு உபைதா தலைமை தாங்கினார்.வரலாற்று கண்காட்சியை ம.ம.க. மாநில நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் பெண்களுக்கு சிறப்பு பயான், மாணவிகளின் சிற்றுரைகள், மாணவிகள், உலமாக்களின் பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், பல்வேறு அரபிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ஜஹபர் சாதிக் சிராஜி வாசித்தார்.

    முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக், தையல் சான்றிதழ்களை ஜக்கரியாவும் வழங்கினர். கல்வியின் நோக்கம், ஒழுக்கமான வாழ்க்கைக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் ஆகியவை குறித்து ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஹாஜி அப்துல் கரீம் பேசினார். உடன்குடி ஓன்றிய அளவில் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ்பேகம், சித்தி ஷபீனா, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சலீம், மகபூப் மற்றும் திரளான இஸ்லாமிய அறிஞர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • எஸ்.எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஜி. பழம்ரவி பங்கேற்று பேசினார். 2017 முதல் 2020 வரை இந்த கல்லூரியில் 5 துறைகளில் படித்த சுமார் 450 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தாளாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு துறை செயலாளர் நாராயணன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    • பரமக்குடி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • இளைஞர்கள் தங்களுக்குள் லட்சியத்தை வளர்க்க வேண்டும் துணைவேந்தர் பேசினார்.

    பரமக்குடி

    பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 20, 21 மற்றும் 22-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை தாங்கினார்.

    முதல் நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 600 மாணவர்களுக்கு பட்டங் களை அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ரவி வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பட்டப்படிப்பு என்பது கடினமான பயணத்தின் முடிவல்ல, ஆனால் பிரகாச மான எதிர்காலத்திற்கான வாக்குறுதிகளுடன் கூடிய அழகான பயணத்தின் ஆரம்பம்.

    பெரிய உலகிற்கு அடி யெடுத்து வைக்கும் போது, சமுதாயம் மற்றும் தேசத்தின் நன்மைக்காக உழைக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் கள் தியாகத்தால் நீங்கள் பட்டதாரி ஆகி உள்ளீர்கள்.

    மனித வாழ்வில் அடை யும் நீண்ட செயல்பா ட்டின் முதல் படி இலக்கை நிர்ண யித்தல். இலக்கை நிர்ண யித்த பிறகு, இளைஞர்கள் தன்னம்பி க்கையின் நேர் மறையான லட்சியத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2-வது நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மத்திய கருவி மற்றும் சேவை ஆய்வக இயற்பியல் துறை யின் தலைவர் நெடுமாறன் கலந்து கொண்டு 1200 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    • இந்தியாவின் செயல்பாடுகளும், நிலைப்பாடுகளும் உயர்ந்திருப்பதால் பிற நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன.
    • மாணவர்கள் ஆக்கப் பூர்வமான அறிவோடும் திறமையோடும் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

    கல்லூரி நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி புதிதாக கட்டியுள்ள வெள்ளி விழா கட்டிடத்தை திறந்து வைத்து வெள்ளி விழா மலரை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:

    இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் இந்தியாவின் பேரும் புகழும் உயர்ந்து நிற்கிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் போது இந்தியா 100 ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும். மிக்க மகிழ்ச்சியான தருணமாக அது அமையும். இன்று பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவருக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்து இருக்கிறது. அதனை தவறாக பயன்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் செயல்பாடுகளும், நிலைப்பாடுகளும் உயர்ந்திருப்பதால் பிற நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன.

    மாணவர்கள் ஆக்கப் பூர்வமான அறிவோடும் திறமையோடும் செயல்பட வேண்டும். பட்டம் பெற்ற உங்களது சிந்தனைகள் சிறப்பாகவும் உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும். ஆலமரத்தின் விதைகள் போல இருந்து எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி, கல்லூரி செயலாளர் என்.ஆர்.டி.பிரேம்குமார், இணைச் செயலாளர் பிரேம்சந்த், கல்லூரி முதல்வர் இனிதா லீபனோன் எபன்சி, துணை முதல்வர் ஜாபியா சாலமோன், பன்னாட்டு அரிமா இயக்குனர் ஆர்.சம்பத், ஜெ.பிரவீன்குமார் கலந்து கொண்டனர்.

    • தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • பட்டமளிப்பு விழா வழிமுறைகள் குறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தென் மண்டல இயக்குனர் அரவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 665 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் சாதி, மத பேதமின்றி ஒழுக்கத்துடன் கூடிய தகுதியை வளர்த்துக் கொண்டு கல்லூரியில் சிறந்து விளங்கியது போலவே சமுதாயத்திலும் சிறந்து விளங்க வேண்டும். சமுதாயத்திற்கு பயன்பெறும் வகையில் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் புதிய பாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், மாணவர்கள் எப்பொழுதும் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்றார். தாளாளர் கல்யாணி வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் வரவேற்றார். பட்டமளிப்பு விழா வழிமுறைகள் குறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கூறினார் . ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது.
    • கல்லூரி நிர்வாகி அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஹிதாயத்துல்லாஹ் ஆலிம் தலைமை தாங்கினார். மதினா நகர் பள்ளிவாசல் தலைவர்அப்துல் மஜீத், செயலாளர் சம்சுதீன், பொருளாளர் நயினா முகம்மது, ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். மாணவி ஹனா பாத்திமா கிராஅத் ஓதினார். கல்லூரி நிர்வாகி அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார். பேராசிரியர் செய்யது இப்ராஹிம் ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வல்லம் என்.எம்.முஹம்மது சுல்தான் ஆலிம், தென்காசி மாவட்ட அரசு காஜி முஹ்யித்தீன் ஹழ்ரத், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் வடகரை ஷாகுல் ஹமீது ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலப் பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி 10 மாணவிகளுக்கு ஸனது பட்டம் வழங்கி சிறப்புரை யாற்றினார். எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் சமுக சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, துணை தலைவர் செய்யது இமாம், தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி, அப்துல் மஜீத் ஆலிம், சாகுல் ஹமீது, பேராசிரியர் காஜா முஹையதீன் ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் இமாம் அஹமது மீரான் ஆலிம் துஆ ஓதினார். அப்துல் ரசாக் நன்றி கூறினார்.

    • பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல.
    • பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக மத்திய இணை மந்திரி முருகன் பங்கற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல என்றார். பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிற நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்கு பல்கலைக் கழக நிர்வாகமே முழுப் பொறுப்பு. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் எதிர்காலக் கடமைகளை உணர்த்தி நல்ல செய்திகளை சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும்.

    அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது.

    துணை வேந்தர் தேடுதலில் மாநில அரசை எவ்வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் அலுவலகம். தற்பொழுது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களின் அழைப்பிதழ் தயாரிப்பதிலும் தலையிட்டு மரபுகள் மீறப்பட்டுள்ளது.

    வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என்ற நிர்வாக ஏற்பாட்டில், விழாவிற்கு அழைக்கப்படும் வேந்தர், இணை வேந்தர் ஆகியோரே வரிசைப் படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர், வாழ்த்துரை வழங்க அழைக்கப்படுபவர் முதலில் பேசுவதே மரபு ஆகும்.

    ஆனால் தற்போது அந்த மரபு மீறப்பட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டுள்ளது. இணை வேந்தருக்கு பிறகு கௌரவ விருந்தினர் அதன் பிறகு இறுதியாக வேந்தர் என்று அமைந்துள்ளது.

    இது முற்றிலும் மரபு மற்றும் விதிகளுக்கு முரணாக உள்ளது. கௌரவ அழைப்பாளர் ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் அவர் மரபு படி முதலில்தான் பேச வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி Chancellor அடுத்து Pro-Chancellor ஆவார்.

    அதன் அடிப்படையிலேயே நிமிடத்திற்கு நிமிட நிகழ்வு (Minutes tominutes ) தயாரிக்கப்பட வேண்டும். இது மரபு மீறும் செயல் மட்டும் அல்லாமல் ஆளுநர் அலுவலகம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் கூட தலையிடத் தொடங்கி உள்ளதை வெளிப்படுத்துகிறது.

    பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு உள்ளதால் மரபை பின்பற்றி இறுதியாக இணை வேந்தர் அதன் பின்னர் வேந்தர் என்று நிகழ்ச்சி நிரலை முறைப்படுத்த வேண்டும்.

    பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.

    பட்டமளிப்பு விழா நிமிடத்திற்கு நிமிட நிகழ்வில் உள்ள குறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப் படாததால் இப்பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது. #HRDMinistry #University
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.

    ஆனால் ஒரு சில பல்கலைக்கழகங்கள் நிதி மற்றும் நேர பற்றாக்குறையை காரணம் காட்டி பட்டமளிப்பு விழாவை தவிர்த்துவிடுவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது.

    இது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பட்டமளிப்பு விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். இது பட்டதாரி மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கு பெருமை சேர்க்கக்கூடிய தருணமும் கூட” என்றார்.  #HRDMinistry #University 
    ×