பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்/ தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாறன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாறன் பேசினார்.
Published on

மதுரை

இந்து அமைப்பு சார்பில் மதமாற்று தடைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் பேசியதாவது:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்களை தமிழக அரசு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com