என் மலர்
மதுரை
- நாளை இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
- மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி, தேவதேவா்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணி மீனாட்சிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது.
அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் திருவிழாவிற்கான வேலைகள் தொடங்கி விடும்.
சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும். காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி சுந்தரேசுவரா் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே நம்மை தேடி வரும் இறைவனை காண மாசி வீதி முழுவதும் மக்கள் கூட்டமாக கூடி வரவேற்பார்கள். இது தவிர சுவாமிக்கு முன்னால் வரும் டங்கா மாடு, யானை, ஒட்டகம் மற்றும் சிறுவா், சிறுமியா்கள் இறைவனை வரவேற்று ஆடி பாடி வரும் காட்சியை காண உலகம் முழுவதும் இருந்தும் பக்தா்கள் கூட்டம் இந்நாளில் வந்து விடும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடை பெறும் விழாவில் 6-ம் நாளான நேற்று இரவு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யானை மகால் முன்பு நடந்தது. அப்போது தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். பின்னர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (30-ந் தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னத்தியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. எனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
- நண்பர்கள் ராஜகுரு, சந்திரன் ஆகியோரும் உறவினர்களுக்கு அரசு வேலை தொடர்பாக ராமச்சந்திரனிடம் பணம் கொடுத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி வழக்கு பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை கோச்சடையில் உள்ள தேனி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். ஆடிட்டரான இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கார் டிரைவர் விவேகானந்தராஜா மூலம் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மகனுக்கு கல்வி அல்லது பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என கூறினார்.
இதை நம்பி ராமச்சந்திரனிடம் முதற்கட்டமாக ரூ. 6 லட்சம் கொடுத்தேன். இதுதவிர எனது நண்பர்கள் ராஜகுரு, சந்திரன் ஆகியோரும் உறவினர்களுக்கு அரசு வேலை தொடர்பாக ராமச்சந்திரனிடம் பணம் கொடுத்தனர். இதுவரை 3 பேரும் சேர்ந்து ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தேன்.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலையும் வாங்கி தரவில்லை. எனவே பணத்தை தருமாறு திருப்பிக்கேட்டோம். இதில் ராமச்சந்திரன் ரூ. 2 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதம் ரூ. 35 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் மோசடி செய்து விட்டார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி வழக்கு பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.
- மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரை:
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மல்லிகை பூக்கள் அதிகளவில் கிடைப்பதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
தினமும் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு 20 முதல் 25 டன் வரை மல்லிகை பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது மல்லிகை பூக்கள் விலை பெருமளவு சரிந்துள்ளது.
பண்டிகை, திருவிழா மற்றும் முகூர்த்த நேரங்களில் மல்லிகை பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும். சில நேரம் கிலோ ரூ. 1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகும். இதனால் மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை மிகவும் வீழ்ச்சியடைந்து மதுரை மார்க்கெட்டில் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பிச்சி, முல்லை பூக்கள் விலையும் குறைந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.300-க்கும், பட்டர் ரோஸ் கிலோ ரூ. 80-க்கும், சம்பங்கி பூக்கள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
வழக்கமாக கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படும் கனகாம்பரம் மலர்களும் இன்று கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் விலை சரிவு காரணமாக மலர் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆனால் விலை குறைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மல்லிகை பூக்கள் உள்பட பல்வேறு பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
- கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை
ஆரப்பாளையம், மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ், கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறி செய்தது அருள்தாஸ்புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா மகன் சல்மான் (19), தத்தனேரி களத்துப்பொட்டல் கேசவகுமார் மகன் பிரவீன்குமார் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் ஆடு- மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது 2 ஆடுகள் திருடு போனது. இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் மேலூர், பனங்காடி கதிர வன் மகன் காசி விஸ்வநாதன் (23), ஜாபர் மகன் விகாஸ் (21) ஆகிய 2 பேர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
- கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார்.
மதுரை
மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அடோசென்டன். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் செடோரா(வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினர். கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு செடோரா மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் வெளியே சென்றார். அப்போது கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் பெற்றோர் ஒப்புதலின் பேரில் சிறுமி செடோராவின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
- 12 மணி நேர வேலை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
- எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் எழுந்துள்ளது.
மதுரை
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவாபி, நிஜாம் முகைதீன், கோவை மண்டல செயலாளர் லுக்மனாக்தீன், மதுரை மண்டல தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது, மணல் கடத்தல் மற்றும் போதை கும்பலை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு முழுமை யான பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர் உழைப்பை சுரண்டும் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும், திருச்சியில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி முதல் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா–னங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மருதிருவர் மக்கள் களம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அமைப்பு நிர்வாகிகளில் 15 பேரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மருதிருவரின் மக்கள் களம், வீரகுல அமரன் இயக்கம், மருதீஸ்வரர் ஆன்மீக சேவை அமைப்பு, அக முடையார் முன்னேற்ற நலசங்கம், சைவநெறி மீட்பு பேரவை ஆகியவை ஒருங்கி ணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மருதிருவர் மக்கள் களம் நிர்வாகி தெற்கு வாசல் மருதுராஜா கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதிருவர் கட்டிய சேர்வைகாரர் மண்டகபடி பெயரை மறைத்து சிவகங்கை ராஜா பெயரை பதிவு செய்து உண்மை வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் கோவில் நிர்வாகம், சிவகங்கை சமஸ்தானம் ஆகியவை கூட்டு சேர்ந்து செயல்படுகிறது. சேர்வைக் காரர் மண்டகப்படியில் சைவ சமய லீலை வரலாற்று நிகழ்வை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். சேதமடைந்த பெரிய மருது-சின்ன மருது சிலையை சீரமைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மருது பாண்டி யர்கள் செய்த திருப்பணி மற்றும் அருட்ப பணிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.
மருதிருவரின் மக்கள் களம், வீரகுல அமரன் இயக்கம், மருதீசுவரர் ஆன்மீக சேவை உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மேற்கண்ட அமைப்பு நிர்வாகிகளில் 15 பேரை கைது செய்தனர்.
- வேகத்தடை-பேரிகாட் எதுவும் இல்லாத காரணத்தால் குருவிக்காரன் சாலை- வைகையாற்று பாலம் சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
- போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மதுரை
மதுரை நகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு வருகின் றன. அதன்படி வைகை யாற்றின் இரு புறமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
தற்போது வைகை யாற்றில் தென்கரை பகுதி யான ஆரப்பாளை யத்தில் இருந்து சிம்மக்கல், ஓபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை, தியாகராஜா கல்லூரி ஆகிய பகுதிகள் வழியாக விரகனூர் ரிங் ரோடு வரை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரிங் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்க ளும், மதுரையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதால் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் நகர் பகுதியில் ஓபுளா படித்துறை, குருவிக் காரன் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.
குறிப்பாக குருவிக்காரன் சாலை-வைகையாற்று பாலம் சந்திப்பு பகுதியில் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட் டுள்ளது. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனிக் காமல் செல்வதால் விபத்துக் கள் ஏற்படுகின்றன. அங்கு வேகத்தடை, பேரிகார்டு எதுவும் இல்லை.
அண்மையில் இந்தப்பகு தியில் நடந்து சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். எனவே அந்தப்பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் என்ஜினீயரிங் மாணவர் அண்ணாமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மேலூரில் பேங்க் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து சாலையோரம் பழ வியாபாரம் வசித்து வருகிறார்.
இவரது மகன் அண்ணாமலை (வயது20). இவர் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில் படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தனக்கு ஸ்மார்ட் செல்போன் வாங்கித் தரும்படி வீட்டில் கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கி தர மறுக்கவே நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் என்ஜினீயரிங் மாணவர் அண்ணாமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அண்ணாமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், அதலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, 1½ கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளாலும், அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர் எடப்பாடியார் தான்.
இதை உறுதி செய்கின்ற வகையில், தோழமையில் இருக்கிற தேசிய கட்சியான பா.ஜ.க உள்துறை அமைச்சரை எடப்பாடியார் சந்தித்துள்ளார். இது 1½ கோடி தொண்டர்களுடைய மனதில் புதிய உற்சா கத்தையும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.
எடப்பாடியார் மீண்டும் முதல்- அமைச்சராக தமிழகத்தில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு வாராத வந்த மாமனியாக, வரப்பிரசாதமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.
இன்றைக்கு நடைபெறுகிற தி.மு.க. அரசு கையாலாகாத அரசாக, நிர்வாக குளறுபடியில் இருக்கிற அரசாக, ஒட்டு மொத்த குளறுபடியினுடைய அடையாளமாக இருக்கிறது. 12 மணி நேர வேலை என்று சட்டம் இயற்றி அதை நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்கின்றார். இப்படி பல்வேறு குளறு படிகளில் கல்யாண மண்ட பங்களில் மது விற்பனை செய்வோம் என்று ஒரு உத்தரவு போடுகிறார்கள். மக்கள் கொதித்து போராட்ட களத்துக்கு வந்த பிறகு அதை வாபஸ் வாங்கு கிறார்கள்.
சர்வதேச விளையாட்டு மைதானங்களில் மதுபானம் அருந்தலாம் என்கிற ஒரு உத்தரவு பிறகு கோர்ட்டு தடை விதித்த பிறகு அதை நிறுத்தி வைக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதுகிற வகையில் தான் எடப்பாடியார் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா வை சந்தித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றி வேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை குருவிக்காரன் ரோடு வைகை தென்கரை ரோடு ரவுண்டானா அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் பெயர் வெங்கடேசன் என தெரியவந்துள்ளது. மற்ற விபரங்கள் தெரியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
- வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது. செல்லப்ப சர்மா பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் முதல் கால பூஜை நடத்தினர். நேற்று காலை 7.45 மணியளவில் மஹா பூர்ணாகுதி பூஜை செய்து கடம் புறப்பாடானது. பாராயணம் படித்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
கிராம பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வணங்கினர், அம்மச்சியாபுரம் கிராம மக்கள், விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






