கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது
Published on

மதுரை

ஆரப்பாளையம், மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ், கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறி செய்தது அருள்தாஸ்புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா மகன் சல்மான் (19), தத்தனேரி களத்துப்பொட்டல் கேசவகுமார் மகன் பிரவீன்குமார் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஆட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் ஆடு- மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது 2 ஆடுகள் திருடு போனது. இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் மேலூர், பனங்காடி கதிர வன் மகன் காசி விஸ்வநாதன் (23), ஜாபர் மகன் விகாஸ் (21) ஆகிய 2 பேர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com